-
நிழல் முற்றம்
RM19.00நிழல்முற்றம்
என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’. விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எதையும் விவரிப்பதில் எழுதும்போதும் அதற்கு எப்படியோ தடை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன்.
பெருமாள்முருக
Only 2 left in stock
-
கூளமாதாரி
RM39.00மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
Out of stock
-
போண்டு
RM22.00மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை
Only 1 left in stock
-
நெடுநேரம்
RM39.00பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
Only 2 left in stock
-
தீட்டுத்துணி
RM20.00இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உள்ளன.
Only 2 left in stock
-
கெட்ட வார்த்தை பேசுவோம்
RM23.00சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி
Only 1 left in stock
-
கங்கணம்
RM43.00இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.
Out of stock
-
ஏறுவெயில்
RM28.00ஏறுவெயில்
1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.Only 2 left in stock
-
சின்னஞ்சிறு பழக்கங்கள்
RM50.00நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
Only 1 left in stock
-
கொடை மடம்
RM75.00ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்… -கவிஞர் சபரிநாதன்
Only 2 left in stock
-
சக்தி
RM70.00ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான வழியை நான் இப்புத்தகத்தில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவை எல்லாமே சிறப்பானவைதான். உண்மையில் அவை சிறப்பாவற்றிற்கும் மேலானவை, அற்புதமானவை!
நீங்கள் நினைப்பதைவிட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபும் சக்தியையும், வாழ்க்க செயல்படும் விதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது, வாழ்வின் மாயாஜாலத்த்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள், அப்போது நீங்கள் ஓர் ஆற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்!இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வில் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
Only 2 left in stock
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
RM40.00நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்: அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி. மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி. மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி. எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி. நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி
Only 2 left in stock
-
மண்ணில பொழிந்த மாமழை
RM20.00அற உணர்வும் வாய்மையும் வழிகாட்ட அணுவளவு அச்சமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றபட்ட விதைகள். காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகளும் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.
In stock
-
பணம்சார் உளவியல் | The Psychology of Money
RM50.00”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
Out of stock
-
பிரார்த்தனை எனும் சக்தி
RM20.00Murphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.
Only 1 left in stock
-
வங்காரியின் பசுமைத் தூதுவர்
RM9.00சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….
Out of stock
-
நிறம் மாறிய காகம்
RM12.00இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
Out of stock




















