-
வங்காரியின் பசுமைத் தூதுவர்
சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….
-
வானவில் பறவையின் கதை
அதி விநோதமும் கற்பனையும் நிறைந்த நாடோடி இலக்கியம். வாசிப்பின் இனிய பயணத்திற்கான அதிசய உலகம் இந்தப் பல நாட்டுப் பழங்கதைகள்.
-
ஆண்டனி கிளியோபாட்ரா
ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!
– கிளியோபாட்ரா-
-
ஒதெல்லோ
இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
-
மன்னன் லியர்
ஏற்கனவே மாக்பெத், ஹெம்லெட் ஒதெல்லோ ஆகிய துன்பியல் நாடகங்களைத் தமிழில் மொழிப்பெயர்த்துள்ள சிங்கப்பூர் படைப்பாளியான புதுமைதாசன் இப்பொழுது கிங் லியர் என்னும் நாடகத்தை மன்னர் லியர் என்று தம்ழில் பெயர்த்துள்ளார். புதுமைதாசன் நாடகத்தை முழுமையாய், மூலத்தின் உணர்வைப் புலப்படுத்தும் வகையில் பெயர்த்துள்ளார். ஷேக்ஸ்பியரின் அற்புத படைப்பை அழகு தமிழில் ஆக்கம் செய்துள்ளதால் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல் நம் கடமை.
-
மெக்பெத்
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.
-
ரோமியோ ஜூலியட்
ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.
-
ஹேம்லெட்
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
சூறாவளி
ஆம், அது உண்மை. கனவில் தோன்றுதல் போன்று என் வலிமையனைத்தும் போயிற்று. இந்தச் சிறைச்சாளரத்தினூடே நாளுக்கொரு முறையேனும் இப்பெண்னை என்னால் காணவியலுமெனில், என் நண்பர் அநைவர்தம் இழப்பு, “இந்த மனிதர் என்னை அச்சுறுத்தல் அனைத்தையும் என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலும். அதனினும், வேறு விடுதலை நான் வேண்டேன். அது போன்ற சிறை எனக்குப் போதிய சுதந்திரத்தை அளிக்கும்….”
-ஃபெர்டிண்ட்
-
ஜூலியஸ் சீஸர் (தமிழில்)
புதுமைதாசன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியரின் அற்புதமான படைப்பு இந்த நான்காம் நூலான ஜூலியஸ் சீஸர். சீசரின் வீரத்தையும் காதலையும் ஒரு சேர எடுத்துக் கூறும் அற்புதமான படைப்பு. துரோகத்தின் வலியும் இதில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிறப்பு சற்றும் மாறாமல் மொழிபெயர்த்தமைகாக புதுமைதாசன் அவர்களை வெகுவாக பாராட்டலாம்.
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ள
“நேர்மறச் சிந்தனையின் வியத்தகு சக்தி” -
வரலாறு என்னும் கதை
வாலாறு எனும் கதை, எடுவர்டோ அவர்களின் படைப்பு. ரவிக்குமார் அவர்களால் தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.
“நான் உங்களது படைப்பை வாசிக்கும்போது நான் இன்ந்தென வகைப்படுத்தமுடியாத எனது இயலாமையைக் கண்டுகொள்கிறேன். இது வரலாறு? அப்படியானால் வரலாறு நூல்களின் மிகச்சிறந்த வடிவம் இதுவென்பேன். முழுக்க முழுக்க வதந்திகள், முழுக்க முழுக்க கதைகள்.
– சேண்ராஸ் சிஸ்ரோஸ்
-
விழிப்பு (புதுமைதாசன்)
திகில்! மர்மம்!
பிரவிதோறும் விபத்து!
மரண ஒரே இடத்தில்!
என்ன மாயம்! என்ன மர்மம்! -
வெண்ணிறக் கோட்டை
ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.
-