-
21ஆம் நூற்றூண்டுச் சிறுகதைகள்
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறுவேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகால தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நவீன புனைவெழுத்தில் இடையறாது இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.
-
Towards A Third Cinema
The on-screen offerings of Hollywood and Europe have colored the popular perspective of cinema- What it is and what it should be- to such a great extent that the filimic contributions of Latin American directors remain largely uncharted. This book , with its compelling insights, intends to put the stylistically groundbreaking, exceedingly true to life and aesthetically mesmerizing Latin American cinema on the map and establish it as the “Third Cinema”.
By the same Author -
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். -ஜெயமோகன்
-
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
இந்த நாவல் வெளிவந்த புதிதில் பிரம்மராஜன் இது ஜேம்ஸ் ஜாய்ஸின் A Portrait of the Artist as a Young Man நாவலில் ஒரு முக்கியமான கண்ணி உண்டு. எந்த ஒரு இடத்திலும் மதிப்பீட்டு அளவிலான தீர்ப்பை முன் வைக்கும் வார்த்தைகளையோ பார்வையையோ இதில் காண முடியாது. அப்படி ஒரு நாவலை தமிழில் வாசித்தது இல்லை; என்னுடைய மற்ற நாவல்களையும் சேர்த்தே சொல்கிறேன். அந்த வகையில் இந்த நாவல் தனித்தன்மை கொண்டது. -சாரு நிவேதிதா
-
ஒளியின் பெருஞ்சலனம்
974 நவம்பர் இறுதியில், பாரிஸிலிருந்து வெர்னர் ஹெர்ஸாகுக்கு ஒரு ஃபோன் வருகிறது. “லோட்டே ஐஸ்னர் சாகக் கிடக்கிறார். இன்னும் சில மணி நேரமோ அல்லது ஒரு நாளோதான் கெடு. உடனே விமானத்தைப் பிடித்து வா” என்கிறது நண்பரின் குரல். “என்னது, ஐஸ்னர் சாகக் கிடக்கிறாரா? ஐஸ்னர் செத்து விட்டால் அப்புறம் ஜெர்மன் சினிமா என்ன ஆவது? முடியாது. அவரை சாக விட மாட்டேன். இதோ வருகிறேன்” என்று சொல்லி விட்டு, பனியைத் தாங்கும் கடினமான புதிய ஷூவை அணிந்து கொண்டு ம்யூனிச் நகரிலிருந்து நடந்தே பாரிஸுக்குக் கிளம்புகிறார். நவம்பர் 23-ஆம் தேதி கிளம்பியவர் டிசம்பர் 14 அன்று பாரிஸ் வந்து சேர்ந்தார் ஹெர்ஸாக். (புத்தகத்திலிருந்து…)
-
கபடவேடதாரி
‘முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.’ – மோகன் சுவாமிநாதன் ‘Amazing Socio-Political satire.’ – கார்த்திக் ‘மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.’ – ராஜா செல்வராஜ் ‘கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா.’ – ராஜேஸ்வரன் ராமமூர்த்தி ”வித்தியாசமான எழுத்து. வித்தியாசமான சிந்தனை. வித்தியாசமான நடை. தமிழின் ஜார்ஜ் ஆர்வெல். Excellent.’ – இந்துமதி ‘மன வக்கிரம் உள்ள ஒரு கிறுக்குப் பிடித்த பைத்தியக்காரன் எழுதிய கதை’ – ரவிச்சந்திரன் ‘முழுதும் ஃபேஸ்புக்குக்குள் நடக்கும் கதை. அங்குள்ள fake idகள், அவரவர் அரசியல் சார்பு, முட்டல் மோதல்கள், ஆஃபாயில் ஐடியாலஜிகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல்.’ – சித்ரா கோகுலகிருஷ்ணன்.
-
கலகம் காதல் இசை
என்னுடைய இசையை உருவாக்கும்போது நான் இந்தப் பிரபஞ்சத்தால் இயக்கப்படும் ஒரு கருவியாக உணர்கிறேன் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி நம் இதயங்களைத் திறந்து காட்டும்போது இந்தப் பிரபஞ்சம் எந்த அளவுக்கு விகாசமடையும் என்பதை என்னி நான் பரவசமடைகிறேன். -மைக்கேல் ஜாக்ஸன்
-
காமரூப கதைகள்
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.
-
கானகன்
புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி தக்க தண்டனையை வழங்கி விடுகிறது. புலியிடம் நாம் காண்பது வன்மமல்ல; நீதியுணர்ச்சி.
-
கிழவனின் காதலி
போரில் மடிந்த யானைகள், குதிரைகள் மற்றும் வீரர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக்கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் தொற்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும். அவற்றையெல்லாம் உண்டு பூச்சிகள் தூய்மை செய்கின்றன. சிறு சதைத் துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் உண்ண வேட்டை விலங்குகளால் கூட முடியாது. ஆனால், பூச்சிகளால் அவற்றைத் தடயமில்லாமல் தின்று ஏப்பம் விட்டுவிட முடியும்.
– ‘பூச்சி’ சிறுகதையிலிருந்து…
-
சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்
சாரு நிவேதிதா சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்ற மூன்று பிரிவுகளாக அமைந்திருக்கிறது. உலக சினிமாவின் மாறுபட்ட அரசியல் பின்னணியில் தமிழ் சினிமாவின் மந்தத்தன்மையை கடுமையாகச் சாடும் சாரு நிவேதிதா, தமிழ் சினிமாவில் செய்யப்படும் புதிய முயற்சிகளை இக்கட்டுரைகளில் உற்சாகமுடன் வரவேற்கவும் செய்கிறார். சினிமா குறித்த ஆழமான விவாதங்களைத் தூண்டும் நூல் இது.
-
தாந்தேயின் சிறுத்தை
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால நூற்றாண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன.
-
தீக்கொன்றை மலரும் பருவம்
பழமைவாதமும், கட்டுப்பாடுகளும் நிறைந்த நைஜீரியா நாட்டின் வட மாகாணத்து இசுலாமிய சமூகம், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் வன்முறைகளைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட அபுபக்கரின் முதல் புதினமான இது, வயது, வர்க்கம், மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்டுக்கடங்காத மென்னுணர்வுகளை மெல்ல மெல்ல அவிழ்த்து நம் மனதை ஆட்கொள்ளும் மாறுபட்ட காதல் கதை.
-
நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை)
“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.”
நூலிலிருந்து…
-
பழுப்பு நிறப் பக்கங்கள் (மூன்று பாகங்கள்)
என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வில் இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு நூலை இதுவரை எழுதியதில்லை. இதை நான் எழுதவில்லை என்றும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம், லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான் எழுதுகிறேன். அப்படி இருந்தும் இந்தச் செயலில் என் ஆத்மாவே ஈடுபட்டிருப்பதைப் போல் உணர்கிறேன். – சாரு நிவேதிதா
-
-
மலாவி என்றொரு தேசம்
அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும் அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு இல்லை. மூன்றாம் உலக பண்பாடுகளின் கலாச்சாரத் தன்மையையும் அதன் ரகசிய வழிகளையும் அறிவது நமது பன்பாடு குறித்த சில புதிய வெளிச்சங்களை அடையும் ஒரு முயற்சியே. அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.
-
லத்தீன் அமெரிக்க சினிமா
“ஐரோப்பிய சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட லத்தீன் அமெரிக்க சினிமா லத்தீன் அமெரிக்கர்களின் முகங்களைக் காட்டியது. அவர்களுடைய தேசங்களின் பிரச்சினைகளைப் பேசியது. அவர்களுடைய தேசிய குணங்களையும் வெகு ஜன கலாச்சாரத்தையும் கொண்டாடியது. அந்த நாடுகளின் நோய்க்கூறுகளைக் காண்பித்தது. எதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வரலாற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. அதுவரை இல்லாத புதிய சினிமா இலக்கணத்தைக் கொண்டதாக இருந்தது. வெகுஜன சினிமா இலக்கணத்தைத் தலைகீழாக மாற்றியும், கட்டுடைப்பு செய்தும் ‘புதிய’ கதைகளையும் ‘புதிய’ உண்மைகளையும் பேசியது. இதன் இன்னொரு முக்கியமான தன்மை, இந்தப் புதிய லத்தீன் அமெரிக்க சினிமா வெகுஜன சினிமாவுக்குரிய எந்தத் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு முறைகளையும் பின்பற்ற வில்லை. சினிமாவுக்கும் பார்வையாளருக்குமான உறவுகூட இந்தப் புதிய சினிமாவில் வேறு மாதிரி இருந்தது. இந்த சினிமா மிகவும் சுதந்திரமாக இயங்கியது. தொழில் முறையிலான சினிமாவிலிருந்து விலகி விளிம்பில் இருந்தது.” புத்தகத்திலிருந்து…
-
வரம்பு மீறிய பிரதிகள்
வரம்பு மீறிய பிரதிகள்
சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.
-
வாசிப்பது எப்படி?
வாசிக்கிற வழக்கம் குறைந்து போனதால் உருவாகியிருக்கும் தரவீழ்ச்சி அபாயகரமானது. பெரும்பாலான சமூக இழிவுகளுக்குக் காரணியாகவும் இருக்கிறது. இந்நூல் வாசிப்பதன் இடர்பாடுகளை புதிய கோணத்தில் அணுகுகிறது. அவற்றைக் களைந்து வாசிப்பில் முன் செல்வதற்கான குறிப்புகளை தோழமையோடு முன் வைக்கிறது. இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகளின் வாசிப்புப் பழக்கத்தின் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம். மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இந்த நூலின் மீது ஒரு கூட்டு வாசிப்பை உருவாக்கலாம்.