| Author | |
|---|---|
| Publications | எதிர் வெளியீடு |
Related products
-
புலப்படாத நகரங்கள்
RM15.00மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels”.
-
கசார்களின் அகராதி
RM50.001984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் என சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டு விடக்கூடாது என்ற அளவில் மிகக்கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால் மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடையனவற்றுக்கும் ஒரேமாதிரியான முடிவு சாத்தியமில்லை என்றார். இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு
வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக் கொண்ட இனக்குழுவொன்று, அதற்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிடவேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய – செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். நாவலைப் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றை சுவாரசியமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின்வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப்புள்ளியில் துவங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார்.
-
-
காஃப்கா – கடற்கரையில்
RM90.00தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.
-
இருண்ட காலக் கதைகள்
RM20.00இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஓர் இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலை பதினேழு சமகால எழுத்தாளர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. – அ. மார்க்ஸ்
-
புத்தரின் வரலாறு
RM13.00நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்த மத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் ப்த்த சரித்திரம் எழுதப்பட்டது.
-
வேர்கள்
RM99.90அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,
பக்கங்கள்: 910
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.
வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.
அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்.
-
பாலைவனப் பூ
RM40.00நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.









