-
யாருக்கும் இல்லாத பாலை
RM11.00யாருக்கும் இல்லாத பாலை
“இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கின் அழகியலைக் காணலாம். எப்போதும் கவிதைகளில் வெளிப்படையான பொருளைத்தேடும் வாசகர்களுக்கு இது ஒரு சவாலாக அமையலாம். லதாவின் கவிதைகள் வாசகரின் பங்குபற்றலையும், நுண்மதியையும் அதிகம் வேண்டி நிற்பவை. ஏமாற்றும் எளிமைக்குள் மர்மங்களைப் புதைத்துவைத்திருக்கும் கவிதைகள் இவை. மென் உணர்வின் சுகந்தமும், தனிமையின் நெருடலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் வலியும், வன்முறைக்கு எதிμõன குμலும் செறிவான படிமங்களின் ஊடாக இக்கவிதைகளில் வெளிப்படுகின்றன…”
In stock
-
கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை
RM30.00இது பி.எம்.மூர்த்தி அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நூல் மட்டுமல்ல. ரப்பர் தோட்ட வாழ்வியலையும் இந்நாட்டின் தமிழ்க்கல்வி நிலையையும் தமிழ்ப்பள்ளிகளின் சூழலையும் இலக்கிய பாடத்தின் வரலாற்றையும் பதிவு செய்யும் நூல். அவ்வகையில் இது நம்மை பற்றி நமக்கே சொல்லும் நூல். 2025 ஆம் ஆண்டில் வல்லினம் விருது பெறும் பி.எம்.மூர்த்தி அவர்களின் வழ்ழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்நூலை வல்லினம் பதிப்பித்துள்ளது.
In stock
-
மலைக்காடு
RM35.00சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. – ஜெயமோகன்
Only 1 left in stock
-
-
-
-
சத்தியத்தின் ஆட்சி
RM17.50தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை.
சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும், காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள், மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சித்திரங்கள்Only 2 left in stock
-
பாய்மரக் கப்பல்
RM20.00பாவண்ணன் பாவண்ணனின் பாய்மரக் கப்பல் வாழ்க்கை என்னும் மாபெருங்கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு. இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம், துரைசாமி ஆகியோரை இந்தத் தேசத்தில் எங்கெங்கும் காணலாம். அனைவரும் உயிர்ச்சித்திரங்கள். இவர்கள் வழியாகத்தான் வரலாறு மெல்லமெல்ல நகர்ந்து வந்திருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையைக் கலைப் பண்புடன் சித்தரிப்பதில் கைதேர்ந்த பாவண்ணன் இந்த நாவலில் விரிந்த பின்னணியில் காலத்தின் நகர்தலைக் கதையாக்கியுள்ளார்,Only 2 left in stock
-
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி | The Power of Positive Thinking
RM40.00Only 1 left in stock
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி | The Power of Positive Thinking
RM40.00பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
Only 1 left in stock
-
அல் கிஸா
RM15.00அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
Out of stock
-
-
-
-
விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்
RM25.00மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
In stock
-
Pita Suara Mona Fandey
RM35.00Himpunan 13 buah cerpen melangkaui pelbagai ruang etnik, melanggar tabu, menyelit sindiran kritikan sosial, menyelusuri keindahan dunia real magis dan membuka sisi-sisi gelap manusia
In stock
-
-
சிண்டாய்
RM18.00அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். அவரது முதல் சிறுகதை தொகுப்பு ‘சிண்டாய்’ வல்லினம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் திரு.எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ‘வல்லினம்’ இணைய இதழில் ’நிலமும் துயரமும் மனிதர்களும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கும் விரிவான கட்டுரையிலிருந்து சில பத்திகள்…. /இந்தக் கதைகள் வெளிச்சக் கீற்றுகளே எட்டிப் பார்க்காத இருண்ட உலகத்தில் நிகழ்பவை. அந்த இருட்டு தரும் பயத்தையும் தடுமாற்றத்தையும் போக்கவென நிவாரணிகளாக அமைகின்றன சில நம்பிக்கைகள், ரோக்கியா தடவிக் கொள்ளும் தைலத்தைப்போல. கைவிடப்பட்டவர்களுக்கான ஆறுதலை அளிக்கின்றன அத்தகைய நம்பிக்கைகள். மாந்திரீக நடவடிக்கைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் போன்றவை தற்காலிகமான தப்பித்தல்களை சாத்தியப்படுத்துகின்றன. அன்றாடத்தின் புற அழுத்தங்களால் நொந்து நொடிந்துபோன மனம் திசைதெரியாமல் தடுமாறி, சிதைவுற்று அலையும்போது தர்க்கங்களையும் பகுத்தறிவையும்கொண்டு அதனை சீர்படுத்த முடியாது. மனம் எதிர்பார்ப்பது விளக்கங்களை அல்ல, ஆறுதலை அல்லது திசைதிருப்பலை அல்லது போதமற்ற தூக்கத்தை. கடும் உழைப்பாளியான தாத்தாவுக்கு நிலத்தின் மீதிருந்த பற்று தன் மீது இல்லை என்கிறபோது பாட்டிக்கு வடிகாலாக அமைவது அடர்த்தியாக மஞ்சளைப் பூசிக்கொண்டு சாமியாடுவது. விலகலும் வெறுப்பும் கூடுந்தோறும் குளியலறைக் கல்லில் தேய்க்கும் மஞ்சளும் அடர்த்திகொள்கிறது./
In stock




















