Showing all 19 results

  • இப்போது உயிரோடிருக்கிறேன்

    25 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இமையத்தின் படைப்புலகம் இந்த நாவலில் இருத்தலியல் கேள்விகளுடன் மேலும் விரிவடைந்திருக்கிறது. நோய் தரும் வலியுடன், தண்டனையுடன் குற்ற உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் சுமத்தத் தயாராக இருக்கிற மருத்துவ வியாபார உலகம்; பரிவையும் மனிதாபிமானத்தையும் அர்த்தமற்றதாக்கி மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டேயிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சித்தாந்த ஏஜெண்டுகள், மருத்துவமனைகள், கோர்ட்டுகள், அலுவலகங்கள்; கண்டுபிடித்துச் சொல்ல மட்டுமே முடிந்த, சரிசெய்யத் தெரியாத விஞ்ஞானம்; மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கி, நிர்வகிக்கும் குரூரமான அமைப்புகள். வாழும் ஆவலுக்கும் மரணம் என்ற யதார்த்தத்துக்குமிடையே, எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் செயலற்றிருக்க முடியாமல் அல்லாடுவதை தர்மமாக ஏற்றுக்கொண்டுவிட்ட குடும்பம் என்ற பரிதாபமான கருவி. எல்லாம் தற்செயல்தானா? நிச்சயமின்மை, தனிமை, அர்த்தமின்மை இவற்றுக்கு என்ன நிவாரணம்? நாவலின் நேர்மையான பரிசீலனையில் வெளிப்படுவது: குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களின் கையாலாகாத்தனம்; அவற்றுக்கிடையேயான முரண்பாடுகள்; எல்லாவற்றுக்கும் மையமான மனிதன் எங்கே? சமூக வாழ்வின் பிரச்சினைகளான ஏற்றத்தாழ்வும், சுரண்டலும், இரக்கமின்மையும் அன்றாட வாழ்வில் – வாழ்வதும் இருப்பதும் ஒன்றல்ல – பிரதிபலிக்கும் விதத்தில், அடைவதற்கு அரிதான மன அமைதியுடன் எழுதப்பட்டுள்ள – உத்தியும் சவாலானதுதான் – இமையத்தின் இந்த நாவல் இன்னொரு தளத்தில் புதிய உயரத்தை அடைந்திருக்கிறது.

    RM34.50
  • க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

    (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு

    பக்கங்கள் 1344

    புதிய அம்சங்கள்

    திருநர் வழக்குச் சொற்கள்

    தொடர்புச் சொற்கள்

    பெரிய அளவில் (18.5 செ.மீ. – 24 செ.மீ.)

    23800 தலைச்சொற்கள்

    2632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள்

    40130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

    311 படங்கள்

    RM100.00
  • நன்மாறன் கோட்டைக் கதை

    பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள்
    பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட
    முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை
    இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம்
    சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல்
    என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித
    முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே
    ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை
    என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக
    எடுத்துச்சொல்கிறார்.

    RM20.70
  • செல்லாத பணம்

    “நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
    தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
    இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
    அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
    மனித அனுபவத்தின் முழுமை…
    வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
    நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
    முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
    கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
    முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
    தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
    கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
    முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
    ‘செல்லாத பணத்’தின் சிறப்பு.

    RM29.00
  • மண்பாரம்

    இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.

    இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.

    RM24.30
  • கொலைச் சேவல்

    ‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.

    RM23.00
  • சாவுசோறு

    என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்…

    RM17.10
  • எங் கதெ

    இமையத்தின் இந்த நெடுங்கதையில்
    ஆண்-பெண் உறவின் ஒரு
    பரிமாணம் முழு ஆவேசத்துடன்
    பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது.

    இமையத்தின் படைப்புகள்
    அனைத்திலிருந்தும் வேறுபட்ட
    களம்; வேறுபட்ட நடை.

    RM13.50
  • செடல்

    மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.

    RM24.30
  • வாழ்க வாழ்க

    அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்.

    RM11.70
  • நறுமணம்

    இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்
    பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய
    தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்
    அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்
    உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,
    இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்
    இவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி
    போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக
    மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்
    எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்
    எழுப்புகிறார்.

    RM19.80
  • அந்நியன்

    இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

    ‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

    RM21.00
  • குட்டி இளவரசன்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

    நூலிலிருந்து:

    “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
    “இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
    “உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”

    RM13.00
  • அஞ்ஞாடி

    சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

    ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…

    RM120.00
  • கோவேறு கழுதைகள்

    இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.

    சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.

    RM18.90
  • ஆறுமுகம்

    பாண்டிச்சேரி , ஆரோவில், மகனுக்கும் தாய்க்குமான உறவு

    RM18.90
  • வீடியோ மாரியம்மன்

    ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
    நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
    தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
    மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
    கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
    வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
    கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
    நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
    அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
    செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
    கூத்து வைக்காம வுட்டுப்புடாத.

    – நாவலிலிருந்து

    RM18.00
  • பெத்தவன்

    மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
    மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
    எடுத்துச்சொல்லும் நெடுங்கதை.

    RM6.00
  • கடவு

    திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.

    RM16.00