-
சின்னஞ்சிறு பழக்கங்கள்
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
Only 1 left in stock
-
இரகசியம் எப்படி என் வாழ்க்கையை மாற்றியது
கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல். ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
In stock
-
சக்தி
ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான வழியை நான் இப்புத்தகத்தில் உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவை எல்லாமே சிறப்பானவைதான். உண்மையில் அவை சிறப்பாவற்றிற்கும் மேலானவை, அற்புதமானவை!
நீங்கள் நினைப்பதைவிட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபும் சக்தியையும், வாழ்க்க செயல்படும் விதத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும்போது, வாழ்வின் மாயாஜாலத்த்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள், அப்போது நீங்கள் ஓர் ஆற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்!இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வில் அற்புதங்கள் அரங்கேறட்டும்.
Only 1 left in stock
-
நேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்
நேர்மறைச் சிந்தனையை தங்கள் வாழ்வில் பயன்படுத்தி, தைகள் விரும்பிய அற்புத விளைவுகளைப் பெற்றுள்ள ஆயிரகணக்கான மக்கள் எனக்கு எழுதிய கடிதங்களில் இடம்பெற்றிருந்த உண்மை சம்பவங்களின் தொகுப்புத்தான் இப்புத்தகம். நீங்கள் கனவில்கூட நினைத்து பாத்திராத மாபெரும் வெற்றி, ஆரோக்கியம், செம்மையான உறவுகள், மனஅமைதி ஆகியவற்றை நீகள் கைவசப்படுத்த உங்களுக்கு உதவக்கூடிய, நடைமுறைக்கு உகந்த அற்புதமான கையேடு இந்நூல். சூழ்நிலைகள் எவ்வாறாக இருந்தாலும் சரி, அவற்றில் இருந்து மிக சிறப்பான விளைவுகளையே எப்போதும் எதிர்பார்க்கும் சிந்தனைதான் நேர்முகசிந்தனை. நேர்முக சிந்தனையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்வில் எப்படி அற்புதமான விளைவுகளைப் பெறலாம் என்பதை சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான நார்மன் வின்சன் பீல், இப்புத்தகத்தில் எளிய படு சுவாரஸ்யமான முறையில் பல உண்மைக் கதைகளின் பின்னணியில் எடுத்துரைக்கிறார். இப்புத்தகத்தின் மூலம் நீங்கள் கீழ்க்கண்டவற்றை கற்றுக்கொள்ளலாம்: அபரிமித விதியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி. மாபெரும் வெற்றிக்கு உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்வது எப்படி. மணவாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைப்பது எப்படி. எதுவென்றாலும் அசைக்கமுடியாத, பாதுகாப்பை பெறுவது எப்படி. நீங்கள் பயப்படும் விசயங்களை துணிந்து செய்து முடிப்பது எப்படி மன அழுத்தத்திலிருந்து விடுமுறை எடுத்துக்கொள்வது எப்படி
Only 1 left in stock
-
பிரார்த்தனை எனும் சக்தி
Murphy, author of The Power of Your Subconscious Mind, wrote this book to explain to readers how they could attain the source of their good and to get desired results through proper prayer. It is a manual on how to pray, how to maintain prayer as part of everyday activity, how to use prayer in case of emergency or danger, etc. According to Murphy, prayer is an ever present help in time of trouble, but you do not have to wait for trouble to make prayer an integral and constructive part of your life.
Only 1 left in stock