Showing all 10 results

  • ஒச்சை

    நாவலில் மிக நுட்பமான உளவியலும் உள்ளது. அதை வாசகர்கள் தான் படித்துப் பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய வருத்தம், கோபமாகவும் வெறுப்பாகவும் வன்மமாகவும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதே பொதுநியதி. அதன் நீட்சி பல மனிதர்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மாற்றங்களையும் கசப்பான வடுக்களையும் அடுக்கிச் செல்கிறது என்பதை… ‘ஒச்சை’ நாவலை பல சுவாரஸ்யங்களோடு படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

    Mitheen அண்ணனுக்கே உரிய அட்டகாசமான எழுத்து நடையில் கதையை படிக்கும் போதே, அட்டகாசமான சினிமாவை பார்த்த திருப்தி ஏற்பட்டது. நான் படிக்கும் போது இருந்ததை விட கூடுதலாக இன்னும் 30 முதல் 40 பக்கங்கள் அதிகமாகியுள்ளதாம். அப்படியானால் முன்பைவிட தற்போது முழுமையாகிருக்கும் நாவலில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இந்த நாவலை முதன்முதலாக படிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கிய மைதீன் அண்ணனுக்கு எனது நன்றியும் பேரன்பும். ‘ஒச்சை’ புலம் பதிப்பகத்திலிருந்து வெகுவிரைவில் நூலாக வருகிறது.

    RM18.00
  • ஓநாய் குலச்சின்னம்

    ஜியோங் ரோங் எழுதிய  Wolf Totem சீன நாவலை  “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.

    RM50.00
  • வெண்ணிற இரவுகள்

    தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்ப கால படைப்புகளில் ஒன்று வெண்ணிற இரவுகள். அ848-ஆம் ஆண்டு வெளியாகி உள்ளது. 164 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இன்று வாசிக்கையிலும் கதாப்பாத்திரங்களின் அடங்காத இதயத்துடிப்ப்பும் காதலின் பிதேறிய புத்தம் புதியதாகவே இருக்கின்றது. உலகில் வாசிக்கப்பட்டு கொண்டாட்டப்பட்டு வரும் அரிய காதல் கதை இது. இரண்டு ஆண்கள் ஒரு இளம் பெண் . மூன்றே முக்கிய பாத்திரங்கள். நான்கு இரவுகள் ஒரு பகலில் கதை முடிந்துவிடுகிறது. கதை முழுவதும் ஒரே இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்கிறார்கள். முடிவில் பிரிந்து செல்கிறார்கள்.

    RM9.00
  • வகுப்பறையின் கடைசி நாற்காலி

    மலேசியாவில் தமிழாசிரியராகப் பணிசெய்துவரும் ம.நவீன்,

    நான் ஒரு பின்தங்கிய ஆசிரியன் என்ற உரத்த குரலோடு தனது வகுப்பறை நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

    ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்ற அந்த நூல், கவனிக்காமல் ஒதுக்கப்பட்ட குழந்தைகளின் பக்கம் நின்று உரத்த குரலில் பேசுகிறது.

    கேள்வி கேட்கும் மாணவரைப்போலவே கேள்வி கேட்கும் ஆசிரியரும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டிய நிலை நிலவும் இக்காலத்தில் கல்விமுறை மீதான விமர்சனங்கள் அவசியமானவை. விவாதிக்கப்பட வேண்டியவை.

    நூலிலிருந்து,

    மாணவர்களுக்கு நாம் வருட இறுதியில் ஒன்றைமட்டும்தான் சொல்லித்தர முயல்கிறோம். அது, ‘திருட்டுத்தனம் செஞ்சாவது ஜெயிச்சிடு….’

    எளிய உள்ளங்களுக்காக அதிகாரம் வளையுமா என்ன?

    பெரியவர் சிந்திப்பதைத்தான் 12 வயது மாணவனும் சிந்திக்கவேண்டும் என எண்ணுவதும் அதையே திணிப்பதும் வன்முறை.

    நாம் உருவாக்குவது விஞ்ஞானிகளை அல்ல,உயர்தரக் கூலிகளை.

    குழந்தைகளின் நிலையிலிருந்து பார்க்கும் இதுபோன்ற ஆசிரிய,ஆசிரியைகளின் வகுப்பறை அனுபவங்களைத் தொகுக்கவும் விவாதிக்கவும் வேண்டும்.

    RM9.00
  • உலகின் நாக்கு

    பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், .நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
    காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது.
    உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.

    ஜெயமோகன் முன்னுரையிலிருந்து..

    RM12.00
  • கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

    கௌஜின் ஜியாங்கின் புனைவுகள், நாடகங்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980-இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின.1987- டிசம்பரில் இலக்கிய சுதந்திரம் தேடி சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரிசில் குடியேறினார். இத்தொகுப்பில் உள்ள ஆறு கதைகளும் அவரே தெரிவு செய்தவை. அவரது பார்வையில் இந்த ஆறு கதைகளும் அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். 2000-ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

    RM12.00