-
-
-
தன்மீட்சி
RM18.00இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.
திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.
இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.
திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.
தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.
RM20.00Out of stock
-
காடு
RM58.50அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது.
RM65.00Only 2 left in stock
-
இன்றைய காந்தி
RM45.00காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.
RM50.00Out of stock
-
அனல் காற்று
RM16.00அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட்டும் உறவுகள்.
இது காமத்தின் அனல் காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடிகொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும் என எண்ணச்செய்கிறது.
Out of stock
-
ஊமைச்செந்நாய்
RM22.00அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன.
RM24.50Out of stock
-
ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை
RM19.00இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும்,
ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.
– ஜெயமோகன்Out of stock
-
நூறு நிலங்களின் மலை
RM16.00நூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) – ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள். ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்.
Out of stock
-
குகைகளின் வழியே
RM14.40குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) – ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர. இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.
RM16.00Out of stock
-
இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்
RM31.50இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.
RM35.00Out of stock
-
அருகர்களின் பாதை
RM28.00ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச்சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர்.
Out of stock
-
புல்வெளி தேசம்
RM20.25நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது. – ஜெயமோகன்
RM22.50Out of stock
-
முன்சுவடுகள்: சில வாழ்க்கை வரலாறுகள்
RM16.00நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள். இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது.
Out of stock
-
சொல்முகம்
RM22.50பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக் கொண்டு மேடையேறுவேன். எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது. இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது. – ஜெயமோகன்
Out of stock
-
தனிக்குரல்
RM25.00தனிக்குரல்
பொதுவாக மேடைகளில் உரையாற்ற நான் விரும்புவது இல்லை. ஏனென்றால் நான் மிகவும் மோசமான சொற்பொழிவாளன். அனைத்தையும் விட முக்கியமாக, என்னுடைய ஊடகம் எழுத்து. மேடை அல்ல. ஆகவே என் உரைகள் எல்லாமே முன்னரே தெளிவாக கட்டுரை வடிவில் எழுதப்-பட்டவை. அவற்றை சிலமுறை வாசித்து சிறிய குறிப்புகளாக ஆக்குவேன். அதை என் கையில் வைத்துக்கொண்டு மேடையேறுவேன்.
எழுதிவைத்துப் பேசுவதனால் நாம் சொல்லப்போவதென்ன என்பது முன்னரே தெளிவாகிவிடுகிறது. நம் உரைக்கு தொடக்கம் முடிவு உடல் என ஒரு வடிவ ஒருமையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். உரையின் நீளம் நம் கணிப்புக்குள் நிற்கும். மேலும் ஒரே உரையைத் திரும்பத்திரும்ப நிகழ்த்தும் அபாயத்தில் இருந்து எழுத்துமூலம் தப்பிக்க முடிகிறது.
இத்தனை வருடங்களில் என் உரை நன்றாக இல்லை என்று எவரும் சொன்னதில்லை. நான் மேடைகளைக் கவனமாகத் தேர்வு செய்வதனால் என் உரைகள் எப்போதுமே ஆழமான பாதிப்பை நிகழ்த்துவதையே இதுவரை கண்டிருக்கிறேன். மேலும் பேசுவதற்கு அதுதான் காரணம். இவ்வாறு உரையாற்ற நேர்கையில் அதற்கெனத் தயாரித்த உரையின் ஒரு தொகுப்பு இது.
– ஜெயமோகன்Out of stock




















