• புதிய காலம்: சில சமகால எழுத்தாளர்கள்

    என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன். அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது. புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது. எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது. – ஜெயமோகன்

    RM25.00
  • வாழ்விலே ஒரு முறை

    வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது. என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும் எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. “இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்” என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன். – ஜெயமோகன்

    RM18.00
  • வெண்கடல்

    உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.

    RM20.00
  • பனி மனிதன்

    பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.

    RM25.00
  • தன்மீட்சி

    இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இக்குழப்பங்களுக்கு இடமிருக்காது, சமூகத்திலேயே இதற்கான பொதுவிடைகள் உருவாகியிருக்கும், ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் இருப்பதைப்போல. சமூகம் இத்தனை அழுத்தத்தை தனிமனிதனுக்கு அளிக்காது.

    திரும்பத்திரும்ப என்னிடம் இந்த வகையான வினாக்கள் கேட்கப்படுகின்றன. இத்தகைய வினாக்கள் இன்றைய தலைமுறையினரிடம் வலுவாக எழுந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். சென்ற தலைமுறையில் இத்தகைய வினாக்கள் இல்லை. அன்று ஒவ்வொருவரும் சமூகத்தின் பொது அடையாளத்தை தன் அடையாளமென்று கொண்டனர். வேலை, குடும்பம், தனிச்சொத்து, தொழில்வெற்றி, ஓய்வுவாழ்க்கை, இறப்பு என பிறர்போற்றும் வாழ்க்கையே தன் வாழ்க்கை என்று எண்ணி எளிதில் அமைந்தனர். அதுவே நம் மரபு நமக்களிக்கும் வாழ்க்கைப்பாதை. அதை ஏற்றுக்கொண்டால் சிக்கல்களே இல்லை.

    இவ்வகையான கடிதங்களுக்குச் சென்ற இருபதாண்டுகளாகப் பதில் போட்டுக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் இது நம் சமகாலத்தில் உள்ள பொதுப்பிரச்சினை. அனைவருக்கும் உரியது. இதற்கு தனிப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் உண்மையில் உதவாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரசனை, தேடல், அறிவுத்திறன், வாழ்க்கைச்சூழல் சார்ந்து தானாகவே தேடிக் கண்டடையவேண்டியது இது. ஆகவே இப்பிரச்சினையின் பொதுவான தளங்கள் என்னென்ன என்று மட்டுமே சொல்லமுடியும். இரு கோணங்களில். ஒன்று, இது ஒன்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதனுக்கே உரிய தனிப்பிரச்சினை அல்ல. என்றுமுள்ள மானுடப்பிரச்சினை. ஆகவே இதை மரபு எப்படி அணுகுகிறது என்று. இரண்டு, இன்றைய சூழலில் இது பொதுவாக எப்படிப் பொருள்படுகிறது என்று.

    திரும்பிப்பார்க்கையில் நாம் நமக்களிக்கப்பட்ட நாட்களை நம்முடைய அகம் நிறைவுகொள்ளும்படி செலவிட்டிருந்தால், அந்த வாழ்க்கை முழுமையானதுதான்.

    தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது.

    RM18.00RM20.00
  • காடு

    அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது.

    RM49.00
  • இன்றைய காந்தி

    காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும்போது உருவாகும் ஐயங்கள் சிக்கல்கள் ஆகியவை இந்த உரையாடல்கள் வழியாக இயல்பாக உருவாகி வந்துள்ளன. காந்தியை முழுமையாக அணுகும் இந்நூல் அவர் மீது கறாரான ஒரு பரிசீலனையை நிகழ்த்துகிறது.

    RM45.00RM50.00
  • அனல் காற்று

    அனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார்? அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட்டும் உறவுகள்.

    இது காமத்தின் அனல் காற்று. அது குளிர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால் குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடிகொடிகளுடன் நகரையே கொளுத்திவிடும் என எண்ணச்செய்கிறது.

    RM16.00
  • ஊமைச்செந்நாய்

    அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன. 

    RM22.00RM24.50