ஔசேப்பச்சன் ஜெயமோகன் கதைகளில் தோன்றி புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரம். அவர் தோன்றும் கதைகள் இவை. வழக்கமான துப்பறியும் கதைகளைப் போல ஒரு குற்றத்தைத தொடர்ந்து சென்று குற்றவாளியைக் கண்டடைபவை அல்ல. இவை குற்றம் என்னும் புள்ளியில் தொடங்கி வரலாறு, பண்பாடு ஆகியவற்றை இழுத்துக்கொண்டு முன்னகர்ந்து வாழ்க்கையின் அறியப்படாத ஒரு இடத்தைச் சென்று தொடுகின்றன. மானுடனை துப்பறியும் கதைகள் என்று இவற்றைச் சொல்லமுடியும்.
| Categories: | TAMIL NADU BOOKS, குறுநாவல், புனைவு, விஷ்ணுபுரம் பதிப்பகம் |
|---|---|
| Tags: | 2022 Release, Short Stories | சிறுகதைகள், ஜெயமோகன் |
| Publications | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
|---|---|
| Author |
Related products
-
ஜே.ஜே. சில குறிப்புகள்
RM25.00மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
-நாவலிலிருந்து
-
சாயாவனம்
RM25.00சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.
-
புயலிலே ஒரு தோணி
RM33.00ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.
நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
-
பெத்தவன்
RM6.00மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை. -
குட்டி இளவரசன்
RM13.00குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.” -
பிறகு
RM27.50பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.
-
சஞ்சாரம்
RM30.60தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
-
கோவேறு கழுதைகள்
RM18.90இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.









