| Author | |
|---|---|
| Publications | கருப்புப் பிரதி |
கண்டி வீரன்
RM18.00
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
Out of stock
Related products
-
போயாக்
RM18.50தமிழில் மிகச்சிறந்த சிறுகதைகள் அடங்கிய நூலாக போயாக் சிறுகதை தொகுப்பு உருவாகியுள்ளது – சு.வேணுகோபால்
-
நாளை மற்றுமொரு நாளே
RM18.00இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!
-
துயிலாத ஊழ்
RM20.00யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு – எதிர்ப்பு – வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது “துயிலாத ஊழ்” புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
-
அக்கினி வளையங்கள்
RM20.00மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
-
உலோகம்
RM19.80உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணரவேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம் கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம் அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு ஒரு முடிச்சைப் போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த திரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக் கூடியது. ஈழத்தோட தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்கமுடிகிறது.
RM22.00 -
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
RM15.00நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.
-
போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
RM55.00போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் – பிரம்மராஜன்)
மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
– -எலியட் வெய்ன்பர்கர். -









