| Author | |
|---|---|
| Publications | சந்தியா பதிப்பகம் |
துங்கபத்திரை(சிறுகதை)
RM170.00
துங்கபத்திரை(சிறுகதை) – பாவண்ணன்:
Only 2 left in stock
Related products
-
மீஸான் கற்கள்
RM35.00புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
RM15.00தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் இது.
-
அந்த முகில் இந்த முகில்
RM22.50இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.
RM25.00 -
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
RM37.50தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.
-
போயாக்
RM18.50தமிழில் மிகச்சிறந்த சிறுகதைகள் அடங்கிய நூலாக போயாக் சிறுகதை தொகுப்பு உருவாகியுள்ளது – சு.வேணுகோபால்
-
விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்
RM25.00மலேசிய தமிழ் எழுத்தாளர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு தங்கள் படைப்புகள் பிற மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும் என்பது. அந்த எதிர்பார்ப்பில் தவறு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு என்பது ஒருவகை அறிவுப் பரிமாற்றம். ஆகவே அது இருவழிகளிலும் நிகழ வேண்டும். நம் படைப்புகள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதுபோலவே பிற மொழியின் சிறந்த இலக்கியங்கள் தமிழில் மொழியாக்கம் காணவேண்டும். பிற நாட்டு இலக்கியங்களுடன் தமிழுக்கு இருக்கும் அறிமுகம் மலேசியாவில் எழுதப்படும் மலாய், சீன இலக்கியங்களுடன் நிகழவில்லை. காரணம் அவை தமிழில் மொழியாக்கம் கண்டதில்லை. அந்த இடைவெளியின் தூரத்தைக் குறைக்கவே இந்த முயற்சி ஒரு மலாய் எழுத்தாளரின் பத்துக் கதைகளைக்கொண்ட ஒரு தொகுப்பு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை, உலக தமிழ் வாசகர்களுக்கு இந்நூல் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரும்.
-
கருங்காணு
RM10.00மலேசியத் தமிழர்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை, எதிர்கொண்ட சிக்கல்களை குறுநாவல் வழி செறிவாக எழுதியுள்ளார் அ.ரெங்கசாமி
-
நாளை மற்றுமொரு நாளே
RM18.00இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!









