| Author | |
|---|---|
| Publications | வல்லினம் பதிப்பகம் |
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00
புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
In stock
Related products
-
புனைவு நிலை உரைத்தல்
RM10.00மலேசிய மூத்த இலக்கியவாதிகளின் சிறுகதைகள் குறித்த ரசனை விமர்சனக் கட்டுரைகள்
-
புறப்பாடு
RM38.00அனுபவங்களை காலவரிசைப்படி சொல்லமுடியாது.சொன்னால் அதில் இருப்பது புறவயமான காலம். கடிகாரக் காலம். அது அா்த்தமற்றது. அகவயமான காலத்தில் அனுபவங்கள் எப்படி சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதே முக்கியமானது. அதை வௌயே எடுக்க ஒரே வழி மிகவலுவான மையச்சரடு ஒன்றைத் தொட்டு இழுப்பதே. அது இழுத்துவரும் அனுபவங்களே அகக் காலத்தின் வாிசையை அமைத்து விடுகின்றன. நான் ஏதாவது ஒரு நினைவை கைபோன போக்கில் எழுத ஆரம்பிப்பேன். அந்த அனுபவத்தின் சாரமாக ஓடும் சரடு என ஒன்று தென்படும். அது எந்தெந்த விஷயங்களைக் கொண்டுவருகிறதோ அதை எழுதிச் செல்வேன். அதன் வழியாக அப்போது-அதாவது எழுதும் கணத்தில்-ஒரு மெய்மையை அடைந்ததும் முடிப்பேன்
-ஜெயமோகன்
-
-
அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை
RM10.00மலாய் நவீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள் அடங்கிய நூல்.
-
சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்
RM13.00சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்’என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. – பழ. அதியமான்
-
நாவல் கோட்பாடு
RM15.75நாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் – இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
RM17.50 -
இருத்தலியமும் மார்க்ஸியமும்
RM28.50பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
-
மிதந்திடும் சுய பிரதிமைகள்
RM20.00சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் தேடலின் உச்சப் பங்களிப்பு இதுதான் என்று தோன்றியது. அத்துடன், சீனக் கவிதை மொழி பெயர்ப்பினதும் ஆய்வினதும் பாலமாகவும் அந்தத் தேடலே அவருக்கு உதவியுள்ளது. இது தமிழுக்குப் புதிது. வெறுமே ஆங்கில மொழி பெயர்ப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட சீனக்கவிதைகள் சிலவற்றை முன்னரும் வாசித்திருக்கிறேன். அவற்றைவிட இந்த நூல் மேம்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் சங்ககாலக் கவிதைகளும் சீனக் கவிதைகளும் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகளுக்கான ராஜவீதியை அகலத் திறந்து வைக்கும். மிதந்திடும் சுய பிரதிமைகள் அதற்கான பல வெளிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. – வ,ஐ.ச ஜெயபாலன்









