| Author | |
|---|---|
| Publications | கருப்புப் பிரதி |
Related products
-
துயிலாத ஊழ்
RM20.00யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு – எதிர்ப்பு – வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது “துயிலாத ஊழ்” புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
-
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
RM15.00தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் இது.
-
அவர்களின் பேனாவிலிருந்து கொஞ்சம் மை
RM10.00மலாய் நவீன இலக்கியம் குறித்த அறிமுகக் கட்டுரைகள் அடங்கிய நூல்.
-
மலேசிய நாவல்கள் (தொகுதி 1)
RM7.50மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு
RM15.00 -
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
RM28.00முன்னுரை
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
-
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
RM15.00நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.
-
ம்
RM17.00ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்…அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை …
-
மீண்டு நிலைத்த நிழல்கள்
RM30.00மலேசிய – சிங்கப்பூரில் முக்கியமான 25 ஆளுமைகளின் நேர்காணல்கள் அடங்கிய நூல்
RM60.00









