| Author | |
|---|---|
| Publications | வல்லினம் பதிப்பகம் |
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00
புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
In stock
Related products
-
ஈழ இலக்கியம் : ஒரு விமர்சனப் பார்வை
RM19.00இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன் ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும்,
ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்.
– ஜெயமோகன் -
பெரியார்: இன்றும் என்றும்
RM72.00சமுதாயம், மதம், சாதி, தேசியம் என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுவதும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தலைப்புகள் காலம், இடம் விவரங்களுடன் அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.
-
-
துணைக்கால்
RM10.00பதிப்புத்துறை குறித்தும் அதன் சட்ட நுணுக்கங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகள் அடங்கிய நூல்
-
மீசை என்பது வெறும் மயிர்
RM15.50மீசை என்பது வெறும் மயிர்
பெருமிதம் எனக் கருதி முன்னோர் செய்த தவறுகளைக் கொண்டாடுகிறவர்கள், அந்தத் தவறுகளுக்கான தண்டனைகளைச் சுமக்கும் வாரிசாகவும் தம்மை அறிவித்துக் கொள்வது தவிர்க்க முடியாதது
—— ரிச்மாண்ட் ராஷ், சண்டே ரெவ்யூ
தடைசெய்யப்பட்ட நூல்களை வெளிக்கொணர்வதற்கான ஈஜின் நூலகம் இந்த நூலை வெளிக்கொண்டு வந்திருப்பது பொருத்தமானதொரு நடவடிக்கைதான்.
———– அலன் லாம்பர்ட், தி ஸ்பெக்டேடர்’ஸ் வாய்ஸ்
மனிதகுலம் கூட்டாக அடைந்த முன்னோர்களின் மீது ஒரு குழு தனியுரிமை
கொண்டாட்த் தொடங்கியதுமே வருந்த்தக்க வகையில் எல்லாமே மீண்டும் பூஜ்ய நிலைக்குச்
சென்றுவிடும் என்கிற ஆபத்தை இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
-
இருத்தலியமும் மார்க்ஸியமும்
RM28.50பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட்ட தத்துவப்போக்கான இருத்தலியத்தின் முக்கிய பிரதிநிதிகளில் பாஸ்கால், கீர்க்கேகார்ட் நீட்செ, ஹைடெக்கெர், காம்யு, சார்த்தர் ஆகிய அறுவரின் முக்கிய கருத்துகளை, அவர்களது சமூக, வரலாற்றுச் சூழலுடனும் அவர்களுக்கு முந்திய ஐரோப்பியத் தத்துவ மரபுடனும் தொடர்புபடுத்தி விளக்குகிறது இந்நூல். அவர்களால் விமர்சிக்கப்பட்டஹெகலியம், அறிவொளிச் சிந்தனை மரபு ஆகியன குறித்த சுருக்கமான அறிமுகம், இருத்தலியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான மார்க்ஸிய விடைகள் என்னும் வடிவத்தில் மார்க்ஸியத் தத்துவம் குறித்த செழுமையான விளக்கம் ஆகியனவற்றை வழங்குகிறது. மேற்சொன்ன ஆறு இருத்தலியத் தத்துவவாதிகளில், நடைமுறைரீதியாகவும் சிந்தனைரீதியாகவும் மார்க்ஸியத்துடன் நெருக்கமாக வந்து சேர்ந்த சார்த்தரின் கலை-இலக்கிய, தத்துவ, அரசியல் கருத்துகளைத் தொகுத்துக் கூறும் இந்த நூல் சார்த்தர் எழுப்பும் கேள்விகள், மார்க்ஸியத் தத்துவத்தையும் நடைமுறையையும் செழுமைப்படுத்த உதவக்கூடியவை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.
-
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
RM34.20முன்னுரை
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
RM38.00 -
இந்திய ஞானம் – தேடல்கள், புரிதல்கள்
RM31.50இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.
RM35.00









