| Author | |
|---|---|
| Publications | கருப்புப் பிரதி |
ம்
RM17.00
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்…அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை …
Out of stock
Related products
-
-
திருமதி. பெரேரா
RM14.00திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர்
தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம். -
இச்சா
RM35.00இச்சா(நாவல்) – ஷோபா சக்தி:
“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”
-
பால்கனிகள்
RM13.00இயற்கை உயிர்களுக்கு இட்ட ஒரே கட்டளை – உன் இனம் பெருகச் செய்
திருநங்கைகள் குறித்த இரு எதிரெதிர் துருவங்களினாலான சிந்தனைகளே நம்மிடமிருக்கின்றன. ஒரு சாரார் அவர்களைக் கண்டு அஞ்சுவதாகவும் மற்றொரு சாரார் அவர்களிடத்தே பரிதாபப்படுபவர்களாகவும். ஒரு புறம் சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட வேண்டியர்கள் என்பதாகவும் இன்னொருபுறம் அவர்களும் நம்மைப்போல உணர்ச்சியுள்ள ஜீவன்கள் என்பதாகவும். இந்த இரு எண்ணமுமே – அவர்களுக்கு ஆதரவானதாகவும் அல்லது எதிரானதாகவும் – மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் வேறொரு வஸ்து என்று பார்ப்பது போல தான். இந்த இரண்டுமே அவர்களின் விருப்பத்திற்கு எதிரானதாகவே இருக்க முடியும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதில் ஏதோ ஒன்றை எதிர்கொள்வதுதான் ஒரே வழியாக இருக்கிறது. சு.வேணுகோபால் ஒரு சார்பு நிலை எடுக்கிறார். அது, மூன்றாம் பாலினத்தவரின் மீது அன்பைப் பொழிவதாக, அனுதாபப்படுவதாக, இரக்கம் காட்டுவதாக இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்காக அதற்கு எதிர் நிலையிலிருக்கும் பாத்திரங்களை வார்க்கிறார். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கிட்ணனுக்கு எதிராக செயல்படும் போது, ‘இல்லை இல்லை அது அப்படி அல்ல’ என்று சொல்வதாக கிட்ணனின் குரலும், கதைசொல்லியின் குரலும், ஆங்காங்கே சு.வேணுகோபாலின் குரலும் ஒலிக்கிறது.
-
பொய்த்தேவு
RM17.00சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.
-
வெக்கை
RM15.00ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. – இயக்குநர் வெற்றிமாறன்
-
-
இரவு
RM24.30பகல் முழுக்க தூங்கிவிட்டு இரவு விழித்திருக்கும் ஒரு சிறிய சமூகத்திற்குள் நுழையும் ஒருவனைப்பற்றிய கதை இது. பெரிய மிருகங்கள் எவையும் பகலில் விழித்திருப்பதில்லை. அவை இரவில் மட்டுமே வாழ்கின்றன என இவர்கள் நினைக்கிறார்கள். இரவே அழகானது பகல் அழகற்றது என்கிறார்கள். நாவல் இரவை குறியீடாக மாற்றுகிறது. மனித மனத்தின் ஆழத்தில் உள்ள இருண்ட பகுதிகளை இரவு என்று அது வகுத்துரைக்கிறது. இரவின் விரிவான வர்ணனைகள் கொண்ட படைப்பு.
RM27.00









