| Author | |
|---|---|
| Publications | கருப்புப் பிரதி |
கண்டி வீரன்
RM18.00
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
Out of stock
Related products
-
போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
RM55.00போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் – பிரம்மராஜன்)
மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
– -எலியட் வெய்ன்பர்கர். -
ஸலாம் அலைக் (நாவல்)
RM45.00ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
ஆசிரியர் குறிப்பு:இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.
இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்….. -
மஹாத்மன் சிறுகதைகள்
RM10.00மலேசியாவின் இருண்ட பகுதிகளைப் புனைவாக்கியவர் மஹாத்மன். அவரது விவரிப்பில் ஒரு வாசகன் காண்பது அதுவரை நம் கண்களுக்கு எளிதில் அகப்படாத மனிதர்களும் வெளியும்தான்.
-
கே.எஸ்.மணியம் சிறுகதைகள்
RM15.00தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல் இது.
-
கருங்காணு
RM10.00மலேசியத் தமிழர்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை, எதிர்கொண்ட சிக்கல்களை குறுநாவல் வழி செறிவாக எழுதியுள்ளார் அ.ரெங்கசாமி
-
அக்கினி வளையங்கள்
RM20.00மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
-
-
இச்சா
RM35.00இச்சா(நாவல்) – ஷோபா சக்தி:
“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”









