| Author | |
|---|---|
| Publications | காலச்சுவடு |
மாயம்
RM22.00
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.
Only 2 left in stock
Related products
-
ஆண்டனி கிளியோபாட்ரா
RM25.00ஐயன்மீர், அறிவீர், உம் தலைவர்தம் முறைமன்றத்தில் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றவரை நான் காத்திரேன்; அல்லது அமைதிமிகு கண்ணுடைய – மந்தத் தன்மை வாய்ந்த ஒக்டேவியா, ஒரு முறை கூட என்னைக் கடிந்துகொள்ள நான் காத்திரேன். குறைகண்டு கூச்சலிட்டு ஆர்ப்பரிக்கும் காட்சிபொருளாய்க் காட்டுவீரா? அதனினும் அகிப்தின் இழிவுடைச் சாய்கடையையே நான், என் அமைதிமிகு கல்லறையாய்க் கொள்வே, அதனினும் நீர்ரிக்கள் என்மீது மொய்த்துக் கடித்து என்னைச் சாகுமாறு செய்தற்பொருட்டு, நான் நைல் ஆற்றிந் சேற்றில் கிடப்பேன்!
– கிளியோபாட்ரா-
-
நட்சத்திரக் கண்கள்
RM10.00கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
-
வரதனும் மறைந்த மடிக்கணினியும்
RM10.00வரதனும் இயந்திர நண்பனும் என்னும் கதைத் தொடரின் இரண்டாவது பாகமாக அமைந்த வரதனும் மறைந்த கணினியும் என்னும் கதை இளையர்களை கவரும் ஒரு படைப்பு.
-
ஹேம்லெட்
RM25.00ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
-
அணிலின் துணிச்சல்
RM3.00பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.
-
-
பென்சில்களின் அட்டகாசம்
RM3.00மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.









