ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.
இயாகோவின் நயவஞ்சகத்தால் துண்டாடப்பட்ட ஒதெல்லோ, ஒரு சின்ன ஆதாரத்தின் அடிப்படையில் அந்தத் தூயவளைச் சந்தேத்து அவளைக் கொல்வதுதான் இந்த நாடகத்தின் துன்பியல் அடிப்படை. அதற்கு முன்னான அவனின் மனப்போரட்டம் அவனது துயர்ர்தைக் காட்டுகிறது. இது சிறந்த ஒதெல்லோ நாடகத்தின் மமிய உணர்வு. ஒலெதெல்லோ புதுமைதாசனால் சிறப்பாகவே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.