குற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது. குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த கதைகளில் உள்ளன. அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள். எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன.
| Categories: | TAMIL NADU BOOKS, சிறுகதை, புனைவு, விஷ்ணுபுரம் பதிப்பகம் |
|---|---|
| Tags: | 2023 Releasesவ் ஜெயமோகன் நூல், Literature, Short Stories, இலக்கியம், சிறுகதைகள் |
| Publications | விஷ்ணுபுரம் பதிப்பகம் |
|---|---|
| Author |
Related products
-
நாளை மற்றுமொரு நாளே
RM18.00இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!
-
சஞ்சாரம்
RM30.60தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
-
உப பாண்டவம்
RM34.20இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.
-
குட்டி இளவரசன்
RM13.00குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.” -
துயில்
RM47.70தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
-
சாயாவனம்
RM25.00சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.
-
மீஸான் கற்கள்
RM35.00புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.
-
உறுபசி
RM18.00நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.









