| Author | |
|---|---|
| Publications | பாரதி புத்தகாலயம் |
நட்சத்திரக் கண்கள்
RM10.00
கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
Out of stock
Related products
-
யாழ் தமிழ்மொழி பாட விளக்க நூல்.
RM12.00இலக்கண இலக்கிய விளக்க உரை மற்றும் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் உள்ளன.
-
எறும்பும் புறாவும்
RM25.00தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!
-
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
RM8.00பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
-
யாழ் அறிவன் (அறிவியல்)
RM12.00கெ.எஸ்.எஸ்.ஆர் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் படிநிலை 1 மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட நூல். பாடநூலின் துணையுடன் உருவாக்கப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனை வழி விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
-
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
RM8.00சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப்பதிலும் அந்தப் பாதிப்பின் செல்வாக்கு ஆக்கிரமிக்கிறது. உலகத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் நிறைந்த ஒரு முரண் பார்வையை உண்டாக்கும் சக்தி வாய்ந்தது அந்தப் பாலபருவத்து மன முள். பிள்ளைகள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படும் இந்த மானுடப் பேரவலத்தின்மீது, இந்த உலகளாவிய தீவிர சமூகப் பிரச்சினையின்மீது, ஆழ்ந்த முறையில் கருத்துச் செலுத்துகிறது இந்த நூல்; இந்த இழிவுக்கெதிரான விழிப்பை நம்மிடம் ஏற்படுத்துகிறது. எதிர்காலத் தலைமுறை, எதிர்காலச் சமூகத்தின் கூட்டு ஆன்மா நோயடையாதிருக்க, இந்த நூல் இப்போது ஒரு மூலிகையாகத் தோன்றியிருக்கிறது.
-
நம்மைச் சுற்றி காட்டுயிர்
RM5.00சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
-
பென்சில்களின் அட்டகாசம்
RM3.00மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
-
ஒற்றறிதல்
RM29.00கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.









