| Author | |
|---|---|
| Publications | எதிர் வெளியீடு |
Related products
-
-
பாலைவனப் பூ
RM40.00நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்….பெண் விருத்த சேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்புபோல பலவிஷயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13 கோடி பேரிடம் இக்கொடும்நடவடிக்கை கைக்கொள்ளப்பட் டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.
-
புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
RM15.00நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.
-
பதினோரு நிமிடங்கள்
RM30.00உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்.
-
வேர்கள்
RM99.90அலெக்ஸ் ஹேலி, தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்,
பக்கங்கள்: 910
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு அடியுரமாய், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாய்க் கொண்டுவரப்பட்ட கருப்பினத்தவரின் வியர்வையும் ரத்தமும் உள்ளன. தனித்த, முழுமையான பண்பாட்டுடன் ஆப்பிரிக்காவில் வசித்த கருப்பின மக்கள், 18-ம் நூற்றாண்டில் அடிமைகளாக விற்கப்பட்டு, அமெரிக்க நிலத்துக்கு அழைத்துவரப்பட்டார்கள். அங்கு கிடைத்ததெல்லாம், உயிரை உடலில் தக்க வைத்துக்கொள்ளப் போதுமான உணவு மட்டும்தான்.
வசைகள், சித்தரவதைகள் என்று பல்வேறு துன்பங்களுக்கு இடையில் பணிசெய்ய அமர்த்தப்பட்ட பரிதாப உயிர்கள் அவர்கள். அப்படி, மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியாவில் பிறந்து, அமெரிக்காவில் அடிமையாக வேலைபார்க்க நேர்ந்த குண்டா கின்டே என்பவரின் வழிவந்த ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர்தான் அலெக்ஸ் ஹேலி. மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இவர், தனது மூதாதையரின் கிராமத்தைத் தேடிச்சென்று அவர்களது வாழ்க்கையைப் புத்தகமாக எழுதினார்.
அதுதான் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்.
-
துண்டிக்கப்பட்ட தலையின் கதை
RM18.00அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைகளிலும் கலையின் பிரதிபலிப்புகளை நம்மால் இனங்காண முடிகிறது. குறிப்பாக முன்னெப்போதையும் விட அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது. மாறாக அது உலகம் சார்ந்த தனக்கான தனித்த பார்வையைக் கொண்டிருக்கிறது. அதையே நாம் அரசியல் என்றழைப்போமெனில் நியாயம் அன்பு அறம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக அது இருக்கும். வெவ்வேறு தேசங்களின் கதைகளாக இருந்தாலும் அதிகாரத்தின் உக்கிரத்தை அது மனிதர்களிடையே உண்டாக்கும் துயரங்களை அதற்கு பதிலீடாக இருந்திருக்கக்கூடிய அன்பை விரிவாகப் பேசும் கதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன.
-
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்
RM38.00நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என. உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு, ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம்.
“மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல். ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது… இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம், கட்டமைவு, மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன்.”
– ஸ்டீபன் ஹ்யூ-ஜோன்ஸ். (நியூ ஸ்டேட்ஸ்மென்).
-
சுல்தானின் பீரங்கி
RM15.00நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது. – அசதா









