| Author | |
|---|---|
| Publications | கருப்புப் பிரதி |
ம்
RM17.00
ஷோபா சக்தியின் இரண்டாவது நாவல் ‘ம்’. ஈழமக்களின் அன்றாட அகதி வாழ் அவலங்களை ஒரு கதை கேட்கும் மனோபாவத்துடன் ‘ம்…அப்புறம்’ என்ற நிலையில் வைத்திருப்பதை …
Out of stock
Related products
-
பேரீச்சை
RM16.00‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.
-
காகித மலர்கள்
RM44.00சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)
-
துயிலாத ஊழ்
RM20.00யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு – எதிர்ப்பு – வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது “துயிலாத ஊழ்” புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
-
நிமித்தம்
RM40.50நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம். நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது. தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன. மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.
-
வெக்கை
RM15.00ஒரு கொலை மற்றும் அதன் பின்னணி, இவற்றின் மூலமாக சாதியக் கட்டமைப்பு, தண்டனைச் சட்டம், சமூக அரசியல் என அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. – இயக்குநர் வெற்றிமாறன்
-
திருமதி. பெரேரா
RM14.00திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர்
தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம். -
இச்சா
RM35.00இச்சா(நாவல்) – ஷோபா சக்தி:
“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”
-
பொய்த்தேவு
RM17.00சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.









