| Author | |
|---|---|
| Publications | MY SKILLS FOUNDATION |
Joy Challenges and Hope
RM30.00
Dr Kannan Pasamanickam has dedicated the vast majority of his life to his patients. Recently, the good doctor wrote an autobiography titled Joy, Challenges and Hope: My Life Journey, where he details well, his journey growing up in a small town in Muar, his passion for the field of medicine and how hope and optimism are important pillars in his life.
In stock
Related products
-
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
-
நம்மைச் சுற்றி காட்டுயிர்
RM5.00சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
-
குமாரிகளின் கோட்டம்
RM15.00நேபாளப் பயணத்தில் இருந்தபோதே நான் ஒவ்வொருநாளும் எழுதிய பயணக்கட்டுரைகள் இவை. தங்கும் விடுதிகளில் பேருந்துப் பயணங்களில் மலைப் பயணங்களில், கடும்குளிரில், தாளாத உஷ்ணத்தில் என அப்பயணம் தோறும் ஒவ்வொருநாளும் என் வலைத்தளத்தில் கட்டுரையைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தேன். நேபாள மலைப் பயணங்கள் தமிழில் பதிவாகியிருந்தாலும் லும்பினி, தங்க்கா ஓவியம், குமாரிக்கடவுளை நேரடியாகச் சந்தித்த அனுபவம் விரிவாக தமிழில் இடம்பெறுவது இதுவே முதன்முறையென நினைக்கிறேன். அவ்வகையில் இப்பயணநூலை எழுதியதில் நிறைவை அடைகிறேன்./
– ம.நவீன் -
-
மண்ணில பொழிந்த மாமழை
RM20.00அற உணர்வும் வாய்மையும் வழிகாட்ட அணுவளவு அச்சமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றபட்ட விதைகள். காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகளும் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.
-
பணம்சார் உளவியல் | The Psychology of Money
RM50.00”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
-
சத்தியத்தின் ஆட்சி
RM17.50தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை.
சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும், காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள், மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சித்திரங்கள் -
வங்காரியின் பசுமைத் தூதுவர்
RM9.00சுற்றுச் சூழல், குழந்தைகள், அறிவியல் சார்ந்து தொடர்ந்து எழுதிவருபவர் ஆதி.வள்ளியப்பன். இந்த நூல் சுற்றிச்சூழல் தொடர்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலமாகவும் எளிய மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதன் மூலமாகவும் மக்களிடையே அமைதி நிலவச் செய்ய முடியும். இதை நிகழ்த்திக் காட்டியதற்காக நோபல் அமைதிப் பரிசு பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாயின் கதை இது, குழந்தைகளுக்காக….









