| Author | |
|---|---|
| Publications | காலச்சுவடு |
மாயம்
RM22.00
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.
Only 2 left in stock
Related products
-
-
நட்சத்திரக் கண்கள்
RM10.00கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
-
-
ரயிலும் குதிரையும்
RM1.50அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?
-
பிஸ்கெட் பட்டாம்பூச்சி
RM3.00காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!
-
விக்ரமாதித்தன் கதைகள்
RM10.00இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். -
ஹேம்லெட்
RM25.00ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
ஓணான் கற்ற பாடம்
RM3.00வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன். நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்க சிறந்த நூல்.









