| Author | |
|---|---|
| Publications | காலச்சுவடு |
கழிமுகம்
RM30.00
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிச் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்க்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்.’ – கல்யாணராமன்
Only 1 left in stock
Related products
-
ஜூலியஸ் சீஸர் (தமிழில்)
RM25.00புதுமைதாசன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியரின் அற்புதமான படைப்பு இந்த நான்காம் நூலான ஜூலியஸ் சீஸர். சீசரின் வீரத்தையும் காதலையும் ஒரு சேர எடுத்துக் கூறும் அற்புதமான படைப்பு. துரோகத்தின் வலியும் இதில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிறப்பு சற்றும் மாறாமல் மொழிபெயர்த்தமைகாக புதுமைதாசன் அவர்களை வெகுவாக பாராட்டலாம்.
-
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
RM8.00பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
-
-
ஹேம்லெட்
RM25.00ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
-
மெக்பெத்
RM25.00ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.
-
The Illusory of River
RM40.00the tragic tale of a failed Hindustani vozalist who performed but once on stage. the book poignantly traces what drove dhananjay across that slippery line that the world drawan between sanity and madness, and the pain that wrings and mangles the hearts of those who feel life and art a little too deeply. at the same time, the novel figure sa as a revelry of Hindustani music with its profound knowledge and appreciation of the classical art form.
-
அணில் தோப்பு
RM3.00அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?









