| Author | |
|---|---|
| Publications | ஆதிரை வெளியீடு |
திருமதி. பெரேரா
RM14.00
திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலைப் போல நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு சிறுகதையில் சிறு கதாபாத்திரமாக வந்து போகும் நபர், அடுத்தடுத்த சிறுகதைகளில் பிரதான கதாபாத்திரமாக தனது கதையைச் சொல்லியிருப்பார். இந்தக் கதாபாத்திரங்களோடு கைகோர்த்துக் கொண்டு நீங்களும் இறப்பர் தோட்டங்களில், நீரணங்குத் தீரங்களில், நகரத்துத் துணிக்கடைகளில், சேனைப் பயிர் நிலங்களில், ரயில் நிலையங்களில், பிணங்கள் மிதந்து செல்லும் ஆற்றின் கரைகளில், போர்
தின்ற நிலங்களில், விகாரை பூமியில் என ஒன்றுக்கொன்று வித்தியாசமான தளங்களில் ஒரு சஞ்சாரியாகத் திரியலாம்.
Out of stock
Related products
-
CHILDREN OF DARKNESS
RM10.00மலேசியாவின் நான்கு நவீனத் தமிழ் இலக்கியவாதிகளின் சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு நூல்.
-
தோட்டியின் மகன்
RM20.00நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
-
-
பாக்ஸ்
RM20.00‘கொரில்லா’, ம்’ நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு.
-
கருங்காணு
RM10.00மலேசியத் தமிழர்களின் ஐம்பது ஆண்டுகால வரலாற்றை, எதிர்கொண்ட சிக்கல்களை குறுநாவல் வழி செறிவாக எழுதியுள்ளார் அ.ரெங்கசாமி
-
அக்கினி வளையங்கள்
RM20.00மலேசியாவில் கோலோச்சியிருக்க வேண்டிய மனிதன் தன் தாயகம் திரும்ப நேர்வதில் முடிகிறது நாவல். சொந்த வாழ்வில் நிம்மதியற்ற சூழலை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அவரது பொருளாதாரம் வீழ்த்துகிறது. சண்முகம்பிள்ளை கண்டடைவது வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம். அதில் அவர் தோல்வியைச் சந்திக்கிறார். இந்த அனுபவத்தை ‘அக்கினி வளையங்கள்’ நாவல் தருகிறது. சை.பீர்முகமது இந்நாவலை எழுதியதின் வழி நிலையான இடத்தைப் பெறுகிறார். சு.வேணுகோபால்
-
ஸலாம் அலைக் (நாவல்)
RM45.00ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
ஆசிரியர் குறிப்பு:இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.
இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்….. -
போயாக்
RM18.50தமிழில் மிகச்சிறந்த சிறுகதைகள் அடங்கிய நூலாக போயாக் சிறுகதை தொகுப்பு உருவாகியுள்ளது – சு.வேணுகோபால்









