• கூளமாதாரி

    மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

    RM39.00

    Out of stock

  • மாதொருபாகன்

    இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது… இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும். – “மாதொருபாகன்” வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து

    RM24.00

    Out of stock

  • கழிமுகம்

    பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிச் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்க்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்.’ – கல்யாணராமன்

    RM30.00

    Only 1 left in stock

  • மாயம்

    பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

    RM22.00

    Only 2 left in stock

  • போண்டு

    மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை

    RM22.00

    Only 1 left in stock

  • நெடுநேரம்

    பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.

    RM39.00

    Only 2 left in stock

  • கெட்ட வார்த்தை பேசுவோம்

    சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி

    RM23.00

    Only 1 left in stock

  • கங்கணம்

    இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.

    RM43.00

    Out of stock

  • ஆலவாயன்

    ‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.

    RM24.00

    Out of stock

  • ஏறுவெயில்

    ஏறுவெயில்
    1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.

    RM28.00

    Only 2 left in stock