Showing 1–20 of 63 results

  • பின்தொடரும் நிழலின் குரல்

    பின்தொடரும் நிழலின் குரல்

    சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி நம் காலகட்டத்தின் பெருங்கனவொன்றின் சரிவு. அத்தகைய எழுச்சி வீழ்ச்சியினாலானதே வரலாறு. இந்நாவல் மானுட அறத்தின் அடிப்படைகளைத் குறித்த ஒரு தேடல்

    RM90.00
  • இரு கலைஞர்கள்

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.

    RM22.00
  • முதுநாவல்

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.

    RM33.00
  • பொலிவதும் கலைவதும்

    இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்

    RM32.00
  • சொல்லிமுடியாதவை

    ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகள் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? செய்தொழிலைப் பழிக்கலாகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? பெண்களின் கற்பு நிலையாக இருக்கவேண்டுமா? பண்பாட்டைச் சுமக்கத்தான் வேண்டுமா? ஜெயமோகன் தன் நண்பர்கள் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த பண்பாட்டுக் கட்டுரைகள் இவை நேரடியான கூரிய கருத்துகள் வரலாற்றுப்பின்புலம் தேடிச்சென்று விவாதிப்பவை.
    By the same Author

    RM18.00
  • துளிக் கனவு

    என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது ஆகவே ஒரு புன்னகையாக ஒரு மெல்லிய துயராக ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை அவை வரும்வகையில் அப்படியே எழுதி கடந்துவிடுகிறேன் ஆனால் பின்னால் திரும்பிப்பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிரேன் அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன் அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.

    RM14.00
  • இவர்கள் இருந்தார்கள்

    பவா எழுதிய கட்டுரைகள் மீடியாவாய்ஸ் இதழில் வெளிவந்தன. அதன்பின் நண்பர் உதயஷங்கர் அதேபோல நினைவுகளை எழுதியிருந்தார். மீடியாவாய்ஸ் ஆசிரியர் ராவ் என்னிடம் அதில் எழுதும்படிக்கோரியபோது அந்த மரபை நானும் கொண்டுசெல்லலாம் என நினைத்தேன். என் நினைவில் நீங்காதிருந்த சில ஆளுமைகளைப்பற்றி எழுத ஆரம்பித்தேன் இக்கட்டுரைகளில் பல முன்பே எழுதப்பட்டவை. சிலவற்றை மாற்றி எழுதினேன். சில கட்டுரைகள் புதியவை. இப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் இவை இவ் வடிவில் வந்திருக்காது அதற்காக திரு ராவ் அவர்களுக்கு நன்றி.

    RM16.00
  • கன்னிநிலம்

    நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை. – ஜெயமோகன்

    RM20.00
  • வெள்ளை யானை

    மிக முக்கியமான வரலாற்று நிகழ்வை புனைவின் மொழியில் ஆவணப்படுத்துகிறது. இந்தியாவின் முதற் தொழிலாளர் வேலைநிறுத்தம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை காவுவாங்கிய அதி உக்கிரமான தாது வருஷ பஞ்சத்தின் பின்புலத்தில், சென்னையின் ஐஸ் ஃபேக்டரியில் 1878 ஆம் ஆண்டில் நடந்தேறியது. நாவல் அந்தப் போராட்டத்தின் பின்னணியை ஆங்கிலேய ராணுவ அதிகாரியின் பார்வையில் விரித்து எடுக்கிறது.

    RM50.00
  • அறம் (ஜெயமோகன்)

    இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
    ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம்

    RM40.00
  • எழுதும் கலை

    நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை மு

    RM13.00
  • ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

    எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து ஆராய்ந்த நாம் சாம்ஸ்கி போன்றவர்கள் குழந்தை, மொழியை அடையும் விந்தையைப்பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். குழந்தையின் சிந்தனையின் அமைப்பு நரம்புக் கட்டமைப்பாக அதன் மூளைக்கும் ஏற்கனவே உள்ளது. புற உலகம் அதற்குச் சொற்களையும் படிமங்களையும் மட்டுமே அளிக்கிறது. ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள், கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான். இந்தச் சிறிய நூல் என் மகள் ஜெ. சைதன்யா பற்றிய தொடர்ந்த அவதானிப்புகளால் ஆனது. என் தணியாத பாசத்தால் ஈரமானது. என் கனவுகளால் ஒளியூட்டப்பட்டது. குழந்தை மனம் மெய்ஞானத்தைத் தொடும் சில கணங்கள் இதில் இருப்பதால் இது ஒரு பேரிலக்கியம். ~ எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகளின் குழந்தைமையை அருகிருந்து அவதானித்த ஒரு படைப்பாளித் தந்தையின் அனுபவ உரையாடல்களின் தொகுப்பாக, ‘ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு’ என்னும் நூல் தன்னறம் வாயிலாக மீள்பதிப்பு அடைகிறது. “தூய்மையான மனம் இயற்கையை எதிர்கொள்ளும்போது மொழி அழகிய படிமங்களாக மாறிவிடுகிறது. கவித்துவம் ஒவ்வொரு நாளும் குழந்தைகளின் மொழியில் உருவாகிக் கொண்டிருக்கிறது. மானுடஞானம் எவ்வாறு உருவாகிறது என்பதை குழந்தை மொழியைக் கற்றுக்கொள்ளும்போது உணரலாம்” என்னும் நித்ய சைதன்ய யதி அவர்களின் வார்த்தைகள் சுமந்துள்ள ஆழுள்ளத்தை, எழுத்தின்வழி அறியச்செய்கிற ஒரு வழிகாட்டிநூலாக இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் மழலைஞானத்தின் வேர்களைப்பற்றி விவரிக்கிறது.

    RM10.00
  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

    இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 – ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.

    RM23.50
  • அபிப்பிராய சிந்தாமணி

    இந்நூலில் ஜெயமோகன் தன் இணையதளத்தில் எழுதிய பகடிக் கட்டுரைகள், நகைச்சுவைச் சித்தரிப்புகள் உள்ளன. இவை வழக்கம்போல அன்றாட நிகழ்வுகளைக்கொண்டு எளிய வேடிக்கையை முன்வைப்பவை அல்ல. பல கட்டுரைகளில் நுட்பமான மானுடச் சித்திரங்கள் உள்ளன. தத்துவதரிசனங்கள் தலைகீழாக்கப்பட்டுள்ளன. கேலிக்கு ஆளாவது எது என சற்று யோசிக்கும் வாசகர்களுக்குரிய நுட்பமான நகைச்சுவை எழுத்து இது

    RM90.00
  • கன்னியாகுமரி

    இந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன் வைப்பது. மாறூதல்கள் அனைத்தும், வளர்ச்சியும் கூட , இழப்புகளையும் வலிகளையும் உறுவாக்குகிறது. அ\எந்த அமுதக்கடலும் கடையப்பட்டாலும் விஷத்தையே உமிழும் போலும்.

    RM19.00