Showing 41–60 of 70 results

  • புதுமைப்பித்தன் கதைகள்

    செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.

    RM57.70

    Out of stock

  • சிங்கைத் தமிழ்ச் சமூகம் வரலாறும் புனைவும்

    சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையைஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், !தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி,கருத்தில் தெளிவு கூடுகிறது. சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்றபழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல், பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம்’என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால் க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’. – பழ. அதியமான்

    RM13.00

    Out of stock

  • மணல்

    தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும் இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா? தலைமுறைகள் கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகிவிடும்.

    RM10.00

    Out of stock

  • பால்யகால சகி

    பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட புனைகதை ‘பால்யகால சகி’. எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பது தான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது. அதன் பின்னுள்ள படைப்பு மனம்தான் பஷீரை மலையாளப் படைப்பாளிகளில் ‘உம்மிணி வலிய ஓர் ஆளாக’ – இன்னும் பெரிய ஒருவராக – ஆக்குகிறது. ‘பால்யகால சகி’க்கு இன்று உருவாகியிருக்கும் செவ்வியல் தகுதியும் அதனால்தான்.

    RM10.00

    Out of stock

  • பாத்துமாவின் ஆடு

    வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமா வின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்த்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம்.

    RM12.50

    Out of stock

  • மதில்கள்

    மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான சுகுமாரன். ‘மதில்கள்’ நாவலைப் பஷீர் எழுதிய பின்னணியைக் கூறும் பழவிள ரமேசன் கட்டுரையும் அதைத் திரைப்படமாக்கியது குறித்து அடூர் கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    RM9.50

    Out of stock

  • சப்தங்கள்

    வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

    RM11.50

    Out of stock

  • மரப்பசு

    ‘மரப்பசு’ எழுபதுகளின் தொடக்கத்தில் ‘கணையாழி’ இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்றூ முதல் இன்றுவரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது – ஆதரவாகவும் எதிராகவும்

    RM29.00

    Out of stock

  • தனிமையின் நூறு ஆண்டுகள்

    வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் – ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ – இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் (1950களில்) பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

    RM45.00

    Out of stock

  • மோக முள்

    இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை – பெரியதோர் சாதனை.

    RM79.00

    In stock

  • சில நேரங்களில் சில மனிதர்கள்

    (“சாகித்திய அகாதெமி விருது” பெற்ற சிறந்த நாவல்)
     இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன. காலத்தின் அலைகளால் எற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது! ஜெயகாந்தன்.

    RM42.50

    Out of stock

  • விளம்பர நீளத்தில் ஒரு மரணம்

    நவீன உலகின் சிக்கலை அதைவிடவும் நவீனமான முறையில் சொல்லியிருக்கும் நாவல் இது. ஒரு கொலையிலிருந்து பிரிந்துசெல்லும் நாவல், சீனர், ஜப்பானியர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பெண், இந்தியத் தமிழர் என நான்கு பார்வைகளில் சொல்லப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தத்துவவியலாளர் தெரிதாவின் கோட்பாடுகளுடன் தொடங்கும் ஒவ்வோர் அத்தியாயத்தின் சம்பவங்களும் அவற்றை விசாரிக்கின்றன. இச்சொல்முறை தமிழுக்குப் புதிது. காலகாலமாக மீட்டுருவாக்கப்படும் இந்தியப் புராணக் கதையான அகலிகைக்கு இந்த நாவல் புதுமுகம் கொடுத்துள்ளது. சிங்கப்பூரைப் பின்னணியாகவும் அடையாளச் சிக்கலை மையமாகவும் கொண்டது இந்நாவல். ஒரு மேஜிசியனுக்கு நிகரான நுட்பத்தை சித்துராஜ் பொன்ராஜ் விவரிப்புமொழியாகக் கொண்டுள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தின் கதைசொல்லும் பெரும் போக்கிலிருந்து விலகி புதிய பாய்ச்சலை இந்நாவலில் அவர் நிகழ்த்தியுள்ளார்.

    RM22.50

    Out of stock

  • தண்ணீர்

    “சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்” என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது ‘தண்ணீர்’ நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை – நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் – ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை – பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

    RM17.50

    Out of stock

  • எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

    ‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.

    RM12.50

    Out of stock

  • காகித மலர்கள்

    சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது. (முன்னுரையிலிருந்து)

    RM44.00

    Out of stock

  • பிறகு

    பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.

    RM27.50

    Out of stock

  • புயலிலே ஒரு தோணி

    ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.  புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.

    நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.

    RM33.00

    Out of stock

  • கடலுக்கு அப்பால்

    ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரியாகவே சொல்லலாம்.

    RM20.00

    Out of stock

  • சாயாவனம்

    சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

    RM25.00

    Only 2 left in stock