-
சீன லட்சுமி
RM16.00லதாவின் சிறுகதைகள் நவீன பெண்களின் அடையாளப் பரிணாமங்களை பிரகடனமில்லாமல் முன்வைக்கின்றன. அலிசா, நீலமலர், போராளி அக்கா, ஆய்வாளர் வெவ்வேறு வயது காலம், சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படுபவர்கள்.
Only 2 left in stock
-
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
RM15.00எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். அதிலிருந்து கிடைக்கும் தொகையைக்கொண்டு ஆதரவற்றோர் இல்லம் நடத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் கனவு என்றும் சொல்கிறார். நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுர விருது, விளக்கு விருது, இலக்கிய தோட்டம், கலைமாமணி, தமுஎகச விருது, கலையிலக்கிய பெருமன்ற விருது, பபாசி விருது, ஜீரோ டிகிரி தமிழரசி விருது, கண்ணதாசன் விருது, ஆத்மாநாம் விருது, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருது வாசகசாலை விருது, ஸ்பேரோ தொடங்கி உள்ளூர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், செஞ்சிலுவை சங்கம், வரை எந்த அமைப்புமே அவரை விருதுக்கு பரிசீலித்ததில்லை என்பதையே தனக்கான மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறார். ஏற்றத்திலும் எதிர்காற்றிலும் மிக வேகமாக மிதி வண்டி ஓட்டுவதில் தனித்திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி குழந்தைகள் நாய்கள், பூனைகள் , மலர்கள், மழை , மலை போன்றவை தனக்கு கடும் ஒவ்வாமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பு துறப்பு- இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் வாசகர்களுக்கு தற்போது வாழ்கின்ற அல்லது முன் எப்போதோ வாழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு கதையாசிரியரோ, தொகுப்பாசிரியரோ பதிப்பகமோ, விற்பனையாளரோ, காலமோ, ஊழோ, கடவுளோ பொறுப்பல்ல..
Out of stock
-
-
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு பெற்ற குறுநாவல்கள்
RM75.00Out of stock
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு பெற்ற குறுநாவல்கள்
RM75.00வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், மலர்வதி, எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பிகு என.. படைப்புலகில் அவரவர் திறனுக்குரிய வாய்ப்பை வழங்கிய போட்டியாக புதுமைப்பித்தன் நினைவுக் குறுநாவல் போட்டி-2020 நிறைவுற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. அவ்வகையில் எழுபது சதவீதம் இளம்படைப்பாளிகள் வெற்றி பெற்றிருப்பதிலிருந்து எங்கள் புது யுகத்தின் முகங்கள்’ எனும் குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது.
Out of stock
-
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை
RM18.00Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
By the same AuthorOut of stock
-
அறம் (ஜெயமோகன்)
RM40.00இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம்Out of stock
-
ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
RM40.00ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்ல விரும்பும் எந்தவொரு வாசகனுக்கு இந்த தொகுப்பு மிகச்சிறந்த வழிகாட்டியாக ஓரளவுக்கு இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.
Out of stock
-
நெட்டுயிர்ப்பு
RM20.00“மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை.”
Out of stock
-
மழைநிலாக் கதைகள்
RM20.00கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக “மழை நிலாக் கதைகள்” நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.
Out of stock
-




















