Showing all 8 results

  • கதாநாயகி

    கதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்.

    RM36.00RM40.00

    In stock

  • அந்த முகில் இந்த முகில்

    இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.

    RM22.50RM25.00

    Only 1 left in stock

  • ஆலம்

    ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் – மிஷ்கின் – கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

    In stock

  • நான்காவது கொலை

    திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்

    RM16.20RM18.00

    Only 2 left in stock

  • திசைகளின் நடுவே

    Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், 2022 Release, 2023 New Arrivalsவ்

    இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்ரின் சிரப்பம்சம் இவர்ரீன் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்க சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துனிவேன்.

    RM27.00RM30.00

    Only 2 left in stock

  • படுகளம்

    படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று யதார்த்தம் மீறியவை. அந்த அடிப்படை அமைப்புக்குள் கதைமாந்தரின் உள்ளம் வெளிப்படும் விதம், வாழ்க்கையின் சில அரிய தருணங்கள் வழியாக அவை இலக்கியத்தகுதியையும் அடைகின்றன. படுகளம் மிக வேகமாக நகரும் நிகழ்வுகள் வழியாக, சலிப்பற்ற ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியாக ஒரு வாழ்க்கைக் களமும் அங்கு வாழும் மனிதர்களின் அகமாற்றங்களும் சித்தரிக்கப்படுகின்றனவ்

    RM30.60RM34.00

    Only 2 left in stock

  • சியமந்தகம்: ஜெயமோகன் 60

    ஜெயமோகன் எனும் ஆளுமை, ஜெயமோகனின் படைப்புலகம் என மொத்த கட்டுரைகளையும் இரண்டு மையங்களில் தொகுக்கலாம். இரண்டிற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இரண்டும் ஒன்றையொன்று நிரப்பும், தொடும் இடங்களையே இக்கட்டுரைகள் பொதுவாகப் பேசுகின்றன எனச் சொல்லலாம். ஜெயமோகனைத் தாண்டி இக்கட்டுரைகள் சிலவற்றில் நாம் ஒரு காலகட்டத்தின் இலக்கிய உலகைக் காணமுடியும். குற்றாலம் கவிதை முகாம், தருமபுரி சந்திப்பு, ஊட்டி சந்திப்புகள் என முனைப்புடன் திகழ்ந்த காலகட்டத்தை அறியமுடியும். தமிழ் மட்டுமின்றி மலையாள எழுத்தாளர்களான கல்பற்றா நாராயணன், பி. ராமன், தத்தன் புனலூர் மற்றும் கன்னட எழுத்தாளரான ஹெச். எஸ். சிவப்பிரகாஷ் ஆகியோரது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இத்தனை எழுதிய, இத்தனை பயணித்த, இத்தனை செயல்பட்ட இன்னொரு தமிழ் எழுத்தாளர் இருந்ததில்லை. இத்தனை விரும்பப்பட்ட, வசைபாடப்பட்ட வேறு தமிழ் எழுத்தாளரும் உண்டா எனத் தெரியவில்லை. உலக அளவிலேயேகூட வெகுசிலர்தான் இருக்கக்கூடும். இத்தகைய பல பட்டைகள் கொண்ட அருமணியின் சில பட்டைகளை மட்டுமாவது ‘சியமந்தகம்’ தொகுதி காட்டிச்செல்கிறது என்றே நம்புகிறோம்.

    RM90.00

    Out of stock