-
மெக்பெத்
RM25.00ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.
In stock
-
ரோமியோ ஜூலியட்
RM25.00ஆயின், ஷ்…. அமைதி! அதோ! அங்கே அந்தச் சாளரத்தினூடே ஒளிர்வது ஒளியா? அது ஜூலியட் என்னும் ஞாயிற்றினது கிழக்குப்போன்றிருக்கின்றது. அழகிய ஞாயிறே, எழுவாய், எழுந்து அந்த அழுக்காறு மிக்குடைத்த வெண்திங்களைக் கொல்வாய்! நீ அந்த அதனினும் அழகுமிளிர்ந்தவளாதலின், அவள் உன்பால் அழுக்காறுற்றும் துன்புற்றும், நோயுற்றும் வெளிறியும் போயினாள்.
In stock
-
ஹேம்லெட்
RM25.00ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
In stock
-
சூறாவளி
RM25.00ஆம், அது உண்மை. கனவில் தோன்றுதல் போன்று என் வலிமையனைத்தும் போயிற்று. இந்தச் சிறைச்சாளரத்தினூடே நாளுக்கொரு முறையேனும் இப்பெண்னை என்னால் காணவியலுமெனில், என் நண்பர் அநைவர்தம் இழப்பு, “இந்த மனிதர் என்னை அச்சுறுத்தல் அனைத்தையும் என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலும். அதனினும், வேறு விடுதலை நான் வேண்டேன். அது போன்ற சிறை எனக்குப் போதிய சுதந்திரத்தை அளிக்கும்….”
-ஃபெர்டிண்ட்
In stock
-
ஜூலியஸ் சீஸர் (தமிழில்)
RM25.00புதுமைதாசன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியரின் அற்புதமான படைப்பு இந்த நான்காம் நூலான ஜூலியஸ் சீஸர். சீசரின் வீரத்தையும் காதலையும் ஒரு சேர எடுத்துக் கூறும் அற்புதமான படைப்பு. துரோகத்தின் வலியும் இதில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிறப்பு சற்றும் மாறாமல் மொழிபெயர்த்தமைகாக புதுமைதாசன் அவர்களை வெகுவாக பாராட்டலாம்.
In stock
-
வரலாறு என்னும் கதை
RM7.00வாலாறு எனும் கதை, எடுவர்டோ அவர்களின் படைப்பு. ரவிக்குமார் அவர்களால் தமிழுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டது.
“நான் உங்களது படைப்பை வாசிக்கும்போது நான் இன்ந்தென வகைப்படுத்தமுடியாத எனது இயலாமையைக் கண்டுகொள்கிறேன். இது வரலாறு? அப்படியானால் வரலாறு நூல்களின் மிகச்சிறந்த வடிவம் இதுவென்பேன். முழுக்க முழுக்க வதந்திகள், முழுக்க முழுக்க கதைகள்.
– சேண்ராஸ் சிஸ்ரோஸ்
Out of stock
-
விழிப்பு (புதுமைதாசன்)
RM20.00திகில்! மர்மம்!
பிரவிதோறும் விபத்து!
மரண ஒரே இடத்தில்!
என்ன மாயம்! என்ன மர்மம்!Only 1 left in stock
-
விலங்குப் பண்ணை
RM9.90லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
Only 1 left in stock
-
வெண்ணிறக் கோட்டை
RM22.50ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.
Out of stock
-
-
அஞ்சல் நிலையம்
RM30.00அஞ்சல் நிலையம்
ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன.
Out of stock












