-
விலங்குப் பண்ணை
RM9.90லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
Only 1 left in stock
-
மிளிர் கல்(நாவல்)
RM23.00மிளிர் கல்(நாவல்) – இரா.முருகவேள் :
சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் – நீர்நிலைகள் – தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.Only 1 left in stock
-
அம்மா வந்தாள்
RM22.50‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
Only 1 left in stock
-
பனி மனிதன்
RM33.00பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.
Only 1 left in stock
-





