-
-
-
-
மிகையின் தூரிகை
பாவண்ணன் சிறுகதைகளில் புராணம், இதிகாசம் அல்லது வரலாறு தொடர்பான புனைவுகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆண்டாள் பற்றிய புனைவான ‘புதிர்’ ஒரு தந்தையின் மனநிலையையும், ஒரு பருவப் பெண்ணின் மனநிலையையும் எழுப்பி நம்மைப் பரவசப்படுத்துகிறது. ‘இன்னும் ஒரு கணம்’ வாசித்தபோது விரிந்த விழிகள் மூடவே இல்லை. ஒரு பெண் தன்னை ஏற்க வேண்டும் என ஓர் ஆணின் மனம் தவிப்பதை மிக அழகாகக்ச் சித்தரித்திருந்த விதம் கண்டு ஆச்சரியப்பட்டேன்; வாசித்தலின் ஆவல் எனக்குள் பெருகுவதை உணர்ந்தேன். இப்படி இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையின் காட்சிச் சித்தரிப்புகள் கண்டு பரவசம் கொண்டிருக்கிறேன்.
In stock
-
குறத்தி முடுக்கு
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.
In stock
-
-
எழுபது கதைகள்
பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன. – பா.வெங்கடேசன்
Out of stock
-
கொரோனா காலம்
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல், நம்பிக்கை என வெவ்வேறு வகைமையால் ஆன கதைகளால் இந்த தொகுப்பு முக்கியம் பெறுகிறது.
Out of stock
-
இரு கலைஞர்கள்
இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.
Out of stock
-
முதுநாவல்
புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.
Only 1 left in stock
-
பொலிவதும் கலைவதும்
இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்
Only 1 left in stock
-
துளிக் கனவு
என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது ஆகவே ஒரு புன்னகையாக ஒரு மெல்லிய துயராக ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை அவை வரும்வகையில் அப்படியே எழுதி கடந்துவிடுகிறேன் ஆனால் பின்னால் திரும்பிப்பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிரேன் அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன் அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.
Only 1 left in stock
-
வெண்கடல்
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.
Out of stock
-
-
-
-
-