-
ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை
RM18.00Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
By the same AuthorOut of stock
-
அறம் (ஜெயமோகன்)
RM40.00இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம்Out of stock
-
ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
RM40.00ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்ல விரும்பும் எந்தவொரு வாசகனுக்கு இந்த தொகுப்பு மிகச்சிறந்த வழிகாட்டியாக ஓரளவுக்கு இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.
Out of stock
-
நெட்டுயிர்ப்பு
RM20.00“மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை.”
Out of stock
-
மழைநிலாக் கதைகள்
RM20.00கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக “மழை நிலாக் கதைகள்” நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.
Out of stock
-
-
ஆள்தலும் அளத்தலும்
RM14.00பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.
சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!
– எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
Out of stock
-
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
RM20.00இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன. நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது. அது நெற்றியின் இடது வெளிப்புறத்திலி ஓட்டைப்ரு பிளக்கும்ந்து கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடுங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. (less)
Out of stock




















