-
கோபிகிருஷ்ணன் படைப்புகள்
RM120.00கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்-தொன்பதின் நிதரிசனங்கள்.
Out of stock
-
விஷக் கிணறு
RM20.00அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப் பிடித்து கடந்து முன் செல்லும். ‘வைரஸ்’ கதைகள் எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலக்கட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண் முன் ஒரு ஸ்டூடியோ உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்க்காக்கும் கருவி உள்ளது மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதைப் பொருத்த முடியும் எப்பேர்ப்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் தேர்வு செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்குக் காரணமான சிக்கலைக் காட்டிலும் பூதாகரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்கக்கூடுமா? எத்தனைக் கேள்விகள்?
விஷக்கிணறு அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.
Out of stock
-
இசூமியின் நறுமணம்
RM17.00இசூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.
Out of stock
-
அம்புப் படுக்கை
RM15.00பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமென கதறவில்லை துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி இயன்றவரை ஒத்திப் போடுவதாக வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது இக்கதை மாந்தர்களைப் போல.
Out of stock
-
ட்ரங்கு பெட்டிக் கதைகள்
RM15.00பெரியதொரு வாசிப்பு பின்புலமோ, அனுபவ, அரசியல், சிந்தாந்தக் கற்பிதங்களோ இல்லாத ஒருவன், ஓவியங்களோடும் அதன் பண்புகளை ஒத்த படிமங்களோடும் உலவியதே என் கதைகளாக இப்போது உருப்பெற்று, சிலது மறுவுருப்பெற்று இருக்கின்றன.
Out of stock
-
நீலகண்டம்
RM27.00நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.
Out of stock
-
ஓந்தி
RM14.00குமார் வெவ்வேறு வகையினங்களுக்கான கதைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றைக் கலாப்பூர்வமாகப் படைத்திருப்பது முக்கியமாகப் படுகிறது. சிங்கப்பூர் சூழலை மட்டுமல்லாது தமிழ் சிறுகதை சூழலுக்கு ஒரு காத்திரமான பங்களிப்பை செய்துள்ள தொகுப்பாக இருக்கிறது.
-சு.வேணுகோபால்.
Out of stock
-
நன்மாறன் கோட்டைக் கதை
RM20.70பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள்
பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட
முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை
இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம்
சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல்
என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித
முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே
ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை
என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக
எடுத்துச்சொல்கிறார்.Only 1 left in stock
-
செல்லாத பணம்
RM29.00“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
மனித அனுபவத்தின் முழுமை…
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
‘செல்லாத பணத்’தின் சிறப்பு.Only 1 left in stock
-
மண்பாரம்
RM24.30இமையத்தின் கதைகளின் பாத்திரங்கள்… ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கை அவர்களுடைய கையில் இல்லை. அது மேல்ஜாதியினரின், மேல்வர்க்கத்தினரின் அதிகாரக் கரங்களில் அடகுவைக்கப்பட்ட வாழ்க்கை; அன்றாட ஜீவனத்துக்கு அல்லல்படும் வறுமை வாழ்க்கை; மனித மரி யாதை இல்லாத வாழ்க்கை. இந்த நடைமுறை வாழ்க்கையை இமையம் கதையாக்குகிறார். அவர் வறுமையைக் கதைகளின் கருவாக்கவில்லை; வறுமையைக் கதைகளின் பின்புலமாக்குகிறார்.
இந்தக் கதைகளின் சிறப்பை இலக்கியத் தோரணைகள், இலக்கிய உத்திகள் நிர்ணயிக்கவில்லை. அறிவுபூர்வமாகத் தெரிந்தெடுத்த சமூகத் தத்துவங்கள் நிர்ணயிக்கவில்லை. அதை யதார்த்தமான வாழ்க்கை நிர்ணயிக்கிறது. கதையின் சிறப்பு நிஜத்தின் சிறப்பு. கதைகள் சொல்லும் நிஜ வாழ்க்கையைப் போல, அலங் காரம் இல்லாமலே கதைகளும் நிஜ வடிவம் எடுக்கின்றன.
Only 1 left in stock
-
கொலைச் சேவல்
RM23.00‘கொலைச் சேவல்’ இமையத்தின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்தக் கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணர முடியும். புலம்பல்களின் கலை வடிவம் என்று இந்தக் கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்தக் கதைகளில் நாம் காணலாம்.
Out of stock
-
சாவுசோறு
RM17.10என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும் என்று மட்டுமே இருக்கக்கூடியவர்கள் அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்…
Out of stock
-
எங் கதெ
RM13.50இமையத்தின் இந்த நெடுங்கதையில்
ஆண்-பெண் உறவின் ஒரு
பரிமாணம் முழு ஆவேசத்துடன்
பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது.இமையத்தின் படைப்புகள்
அனைத்திலிருந்தும் வேறுபட்ட
களம்; வேறுபட்ட நடை.Out of stock
-
செடல்
RM24.30மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.
Out of stock
-
வாழ்க வாழ்க
RM11.70அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்.
Out of stock
-
நறுமணம்
RM19.80இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள்
பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன. புதிய
தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியும் பல நன்மைகளைச் செய்யும்
அதே நேμத்தில், கண்ணுக்குச் சட்டென்று புலப்படாத தளத்தில்
உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும்
இவர் கதைகள் நுட்பமாகச் சித்தரிக்கின்றன. படிப்பு, பதவி
போன்றவை அதிகரித்துவரும் இக்காலத்தில் பல நூற்றாண்டுகளாக
மக்கள் மனதில் வேறூன்றியிருக்கும் பாலின, சாதிப் பாகுபாடுகள்
எவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்வியையும் இமையம்
எழுப்புகிறார்.Out of stock
-
அந்நியன்
RM21.00இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
Out of stock
-
குட்டி இளவரசன்
RM13.00குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”
“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”
“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”Out of stock
-
அஞ்ஞாடி
RM120.00சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…
Out of stock
-
கோவேறு கழுதைகள்
RM18.90இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
Out of stock




















