-
அல் கிஸா
RM15.00அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
Only 1 left in stock
-
மைத்ரி (நாவல்)
RM30.00உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.
Only 1 left in stock
-
கன்னிநிலம்
RM20.00நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை. – ஜெயமோகன்
Only 1 left in stock
-
-
-
-

















