Showing 1–20 of 27 results

  • காவியம்

    என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கிறேன்அவ்வகையில் நான் நின்றிருக்கும் காலத்துடன் இவர்களுக்கு ஓர் இன்றியமையாத இணைப்பை உருவாக்க முயன்றுள்ளேன் என்று படுகிறது.

    புனைவிலக்கியவாதிகளைப்பற்றி விமர்சனங்கள் குறைவாகவே எழும் சூழல் இது எழுந்தாலும் பெரும்பாலும் அரசியலே பேசப்படுகிறது. அவர்களின் புனைவுலகின் நுட்பங்களும் அழகுகளும் பேசப்படுவதில்லை. அதற்கு பிறிதொரு எழுத்தாளனே வரவேண்டியிருக்கிறது.

    RM117.00RM130.00

    Only 1 left in stock

  • ஆயிரங்கால் மண்டபம்

    ஜெயமோகன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இது. அழகிய கற்பனைகள் கொண்ட புதியவகைக் கதைகளின் தொகுதியாக அப்போது மதிப்பிடப்பட்டது. ஜெயமோகன் யதார்த்தவாதக் கதைகளில் இருந்து முன்னகர்ந்து பலவகையான கதைவடிவங்களை பயன்படுத்தி தன் தத்துவத்தேடலையும் மெய்யியல் அறிதல்களையும் முன்வைத்த படைப்புகள் இவை. இவற்றிலுள்ள பல கதைகள் பல்வேறு மொழியாக்கங்கள் வழியாக இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் புகழ்பெற்றவை. இதே வடிவில் இத்தொகுதியை விரும்பிக்கேட்ட வாசகர்களுக்காக இப்போது மீண்டும் வெளிவருகிறது.

    RM20.70RM23.00

    In stock

  • கூந்தல்

    குறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறுகதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும்கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்க்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாகத் தொட்டுவிட முயல்பவை இவை.

    RM17.10RM19.00

    Only 2 left in stock

  • அந்த முகில் இந்த முகில்

    இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை.

    RM22.50RM25.00

    Only 1 left in stock

  • ஆலம்

    ஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் – மிஷ்கின் – கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.

    In stock

  • நான்காவது கொலை

    திண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்

    RM16.20RM18.00

    Only 2 left in stock

  • திசைகளின் நடுவே

    Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், 2022 Release, 2023 New Arrivalsவ்

    இக்கதைகளை இன்று பார்க்கையில் இவற்ரின் சிரப்பம்சம் இவர்ரீன் அகலமே என்று படுகிறது. பல கதைகளில் விரிவான சூழலும், அதிகமான கால அளவும் காணப்படுகிறது. இப்போது என் வாசிப்பு விரிவடைகையில் அமெரிக்க சிறுகதைகளில் இவ்வியல்பு அதிகமிருப்பதைக் காண்கிறேன். சிறுகதையின் முக்கியமான வகை மாதிரி இது என்று இதைக் கூறத் துனிவேன்.

    RM27.00RM30.00

    Only 2 left in stock

  • படுகளம்

    படுகளம் ஒரு வேகப்புனைவு (திரில்லர்) வகை நாவல். இத்தகைய கதைகள் பொழுதுபோக்கு எழுத்தின் ஒரு வடிவமாக இருந்தன, இன்று உலகமெங்கும் இலக்கியப்படைப்புக்கான வடிவமாகவும் ஆகியுள்ளன. இவை ஒரு வாழ்க்கை யதார்த்தத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை தீவிரப்படுத்திச் சொல்லும் அமைப்பு கொண்டவை. ஆகவே சற்று யதார்த்தம் மீறியவை. அந்த அடிப்படை அமைப்புக்குள் கதைமாந்தரின் உள்ளம் வெளிப்படும் விதம், வாழ்க்கையின் சில அரிய தருணங்கள் வழியாக அவை இலக்கியத்தகுதியையும் அடைகின்றன. படுகளம் மிக வேகமாக நகரும் நிகழ்வுகள் வழியாக, சலிப்பற்ற ஒரு வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அதன் வழியாக ஒரு வாழ்க்கைக் களமும் அங்கு வாழும் மனிதர்களின் அகமாற்றங்களும் சித்தரிக்கப்படுகின்றனவ்

    RM30.60RM34.00

    Only 2 left in stock

  • அல் கிஸா

    அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.

    RM15.00

    Out of stock

  • மைத்ரி (நாவல்)

    உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடையும் அகவிடுதலையை இந்நாவல் மேலதிகமாக தொட்டுக்காட்டுகிறது. தமிழில் கதைக்களம் மற்றும் பேசுபொருள் சார்ந்து இந்நாவல் ஒரு முக்கியமான புதிய முயற்சி.

    RM30.00

    Only 1 left in stock

  • இரு கலைஞர்கள்

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.

    RM19.80RM22.00

    In stock

  • முதுநாவல்

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.

    RM33.00

    Only 1 left in stock

  • பொலிவதும் கலைவதும்

    இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்

    RM28.80RM32.00

    Only 1 left in stock

  • கன்னிநிலம்

    நான் இரு ராணுவ நண்பர்களுடன் ராணுவ முகாமில் தங்கியிருந்திருக்கிறேன். கடைசியாக நண்பர் கமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை. – ஜெயமோகன்

    RM22.50RM25.00

    Only 2 left in stock