-
நிழல் முற்றம்
RM19.00நிழல்முற்றம்
என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’. விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எதையும் விவரிப்பதில் எழுதும்போதும் அதற்கு எப்படியோ தடை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன்.
பெருமாள்முருக
Only 2 left in stock
-
கூளமாதாரி
RM39.00மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
Out of stock
-
-
மாதொருபாகன்
RM24.00இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது… இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும். – “மாதொருபாகன்” வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து
Out of stock
-
போண்டு
RM22.00மனித வாழ்வில் வளர்ப்பு விலங்குகள் பெறும் இடத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இவ்வகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார் பெருமாள்முருகன். கடந்த ஆண்டு வந்த ‘வேல்!’ தொகுப்பைத் தொடர்ந்து இது வெளியாகிறது. நாய், பூனை ஆகியவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் சூழலில் அவற்றின் மூலமாக வெளிப்படும் சாதி, பாலின வேறுபாடுகளையும் உடைமை உணர்வையும் இக்கதைகள் நுட்பமாகக் காட்டுகின்றன. பல கதைகள் சம்பவ வலுப் பெற்றவை. மனிதருக்கு விலங்குக் குணம் ஏறுகிறது; விலங்குகளுக்கு மனிதக் குணம் ஏறுகிறது. இந்தப் பரிமாற்றக் களங்களை இக்கதைகள் நம்பகத்தன்மையுடன் சித்திரித்துள்ளன. சுதந்திரமான சொல்முறையும் நிதானமான விவரணையும் கொண்டு நெஞ்சை நெகிழ்த்தும் மொழியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை
Only 1 left in stock
-
நெடுநேரம்
RM39.00பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
Only 2 left in stock
-
தீட்டுத்துணி
RM20.00இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உள்ளன.
Only 2 left in stock
-
ஏறுவெயில்
RM28.00ஏறுவெயில்
1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.Only 2 left in stock
-
கொடை மடம்
RM75.00ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்… -கவிஞர் சபரிநாதன்
Only 2 left in stock
-
நிறம் மாறிய காகம்
RM12.00இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
Out of stock
-
அணிலின் துணிச்சல்
RM3.00பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.
Out of stock
-




















