Showing all 8 results

  • மலைக்காடு

    சீ.முத்துசாமியின் மலைக்காடு மலாயா மக்களின் வரலாறு. மலைக்காட்டின் பேருருவை சீ.முத்துசாமி ஒருவகையான பேய்த்தோற்றமாகவே வர்ணிக்கிறார். ஊரில் மழையின்றி வறண்ட பாலையிலிருந்து வருபவர்களுக்கு அங்கிருந்து சொல்வழியாக அறிகையில் அது விண்ணுலகின் ஒளிகொண்டதாக இருக்கிறது. ஆனால் நேரில் அது அரக்கருலகு. பாலைநிலத்து மக்கள் பசுநிலத்தில் வதைபட்டுச் சாவதிலுள்ள ஊழின் அங்கதமே இந்நாவலைக் கட்டமைக்கிறது. அவர்களின் உள்ளார்ந்த அனலின் உறுமலாகப் பறை உடனிருக்கிறது. அவர்கள் காட்டை அழித்து தோட்டங்களை உருவாக்கும் வெள்ளையர்களுக்குக் கீழே, அவர்களின் அடிமைகளாகவும் அடிமைகளின் ஆண்டைளாகவும் இருமுகம்கொண்ட கங்காணிகளின் சவுக்கடி பட்டு, பொந்துபோன்ற லாயங்களில் தங்கள் தீயூழின் அடுத்தபகுதியை நோக்கிச் செல்கிறார்கள். அம்மக்களின் போராட்டத்தின் கதை இந்நாவல். இதன் முதன்மையான சிறப்பு என்பது எந்த அரசியல் கோட்பாட்டுக்கு உட்பட்டும் அந்த வாழ்க்கையைச் சொல்ல சீ.முத்துசாமி முயலவில்லை என்பதுதான். ஆகவே வாழ்க்கை ஒருவகையான அப்பட்டத்தன்மையுடன் விரிகிறது. – ஜெயமோகன்

    RM35.00

    Only 1 left in stock

  • கூளமாதாரி

    மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

    RM39.00

    Out of stock

  • நெடுநேரம்

    பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.

    RM39.00

    Only 2 left in stock

  • கெட்ட வார்த்தை பேசுவோம்

    சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப் பெருமை கொள்ளப் பல காரணங்கள் உண்டு. இந்த நூலும் அதில் சேர்த்தி. ஆ. இரா. வேங்கடாசலபதி

    RM23.00

    Only 1 left in stock

  • கங்கணம்

    இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.

    RM43.00

    Out of stock

  • நட்சத்திரக் கண்கள்

    கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.

    RM10.00

    Out of stock

  • கரிப்புத் துளிகள்

    “தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.

    நாவலிலிருந்து.

    RM30.00

    In stock

  • The Illusory of River

    the tragic tale of a failed Hindustani vozalist who performed but once on stage. the book poignantly traces what drove dhananjay across that slippery line that the world drawan between sanity and madness, and the pain that wrings and mangles the hearts of those who feel life and art a little too deeply. at the same time, the novel figure sa as a revelry of Hindustani music with its profound knowledge and appreciation of the classical art form.

    RM40.00

    In stock