Showing 21–40 of 70 results

  • கு. அழகிரிசாமி சிறுகதைகள்

    கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்து. தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர். இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் கால வரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.பல கதைகள் முதன்முதலாக நூலாக்கம்பெறுகின்றன. நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கு. அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.

    RM150.00

    Out of stock

  • ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்

    ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை. – சுகுமாரன்

    RM12.00

    Only 1 left in stock

  • கிழவனும் கடலும்

    நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. பல மொழிகளில் திரைப்படங்கள் இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்டள்ளன. ‘கிழவனும் கடலும்’ வெளிவந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்றும் வாசிக்கும்போது இது ஒரு அற்புதமான கதை. ஒரு தளத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம், இன்னுமோர் தளத்தில் மானுடப் பண்பாடு, துணிச்சல், போர்க்குணம் பற்றியது. பிறிதொரு தளத்தில் அமெரிக்காவாழ்வின் மையமாகத் தனிமனிதன் – குழுவோ அமைப்போ அல்ல – இருந்த காலகட்டத்தின் கதை. வாழ்வுக்கான அவன் போராட்டத்தின் சித்திரம். சிக்கனமான சொற்பிரயோகம், தெறிக்கும் விவரணைகளில் தனிமனிதப் போராட்டத்தைக் கொண்டாடும் படைப்பு.

    RM12.50

    Out of stock

  • குறத்தி முடுக்கு

    தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.

    RM14.00

    In stock

  • கடவுளுக்கு வேலை செய்பவர்

    இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.

    RM32.00

    Out of stock

  • பேரீச்சை

    ‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரும் ‘அறங்களையும் விழுமியங்களையும்’ அனோஜன் கதைகளில் காணலாம். காமத்தின் கோணங்களையும் பட்டவர்த்தனமாக எழுதுகிறார். மரபான கதைசொல்லியின் லாவகமும் மொழியும் கொண்ட அனோஜன் கதைகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.

    RM16.00

    Out of stock

  • சுகுமாரன் கவிதைகள்

    நவீன தமிழ் கவிதையில் குறிப்பிடத்தகுந்த கவி ஆளுமையான சுகுமாரனின் முழுக்கவிதைகளின் தொகுப்பு. 1974 முதல் 2019 வரையான நாற்பத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் மொழியிலும் கூறுமுறையிலும் காலத்திலும் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து நிற்பவை. மாற்றம் என்ற மாறாத இயல்பை உயிர்க் குணமாக கொண்டவை.

    RM42.00

    Only 1 left in stock

  • கருக்கு

    செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.

    RM15.00

    Only 2 left in stock

  • ஒளிரும் பச்சைக் கண்கள்

    சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார். தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!

    RM17.50

    Out of stock

  • தீராப் பகல்

    யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையும் சொல்லலாம். இவற்றில் விசாரத்தைவிட விசாரணையும் விசாரணையைவிட விவரிப்பும் வலுவானவை. –சுந்தர ராமசாமி 1990 முதல் எழுதிவரும் எம். யுவனின் மொத்தக் கவிதைகளின் தொகுப்பே ‘தீராப் பகல்’. அவரது ஐந்து தனித் தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் கடந்த ஏழு ஆண்டுகளில் எழுதிய புதிய கவிதைகளும் அடங்கியது இத்தொகுப்பு. அறிந்தவற்றிலுள்ளில் இயங்கும் அறியப்படாத காலத்தையும் அறியத் தவறிய வெளியையும் பெருந்திரட்டின் கவிதைகள் புலப்படுத்துகின்றன.

    RM42.50

    Out of stock

  • அம்மா வந்தாள்

    ‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.

    RM22.50

    Only 1 left in stock

  • வெண்ணிறக் கோட்டை

    ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘வெண்ணிறக் கோட்டை’யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக். ‘வெண்ணிறக் கோட்டை’யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்பல் கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தனக்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிறனுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மைய இழை. ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு. ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியாக்கம் செய்துவரும் ஜி. குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூலஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.

    RM22.50

    Out of stock

  • தலைப்பில்லாதவை

    யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘மணற்கேணி’ 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ‘தலைப்பில்லாதவை’ முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும், விலகி அடைந்த வளர்ச்சியாகவும் காணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட பக்க அளவுக்குள் கச்சிதமான சொற்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்ற அளவில் முன்னதன் தொடர்ச்சி. ஒரே பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டுப் பல முகங்கள், பல குரல்கள் கொண்ட கதைகளாக அமைந்திருப்பது விலகல். முதல் தொகுப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் கதைகள் என்பது வளர்ச்சி. படிக்க சுவாரசியமானவை, படித்த பின் யோசிக்க வைப்பவை என்பன இரண்டு தொகுப்புகளுக்குமான பொதுமை. ரத்தினச் சுருக்கமான, நயமான வரிகளிலான விவரணை, உரையாடல்களில் குவிமையத்தை விட்டு விலகாத இறுக்கம், அடிப்படை விவரிப்பின் சுழிக்குள் வாசக மனத்தை ஈர்த்துவிடும் கூறுமுறை – இவை இந்தக் குறுங்கதைகளின் இயல்புகள். புதிய இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகள் முன்வைக்கப்படும் இன்று சிறுகதை அளிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கும் சீரிய முயற்சியாக யுவன் சந்திரசேகரின் கையடக்கக் கதைகளைச் சொல்லலாம். இந்த வகைமையின் தனித்துவமான முன்னெடுப்பாகவும் இந்தத் தொகுப்பைக் காணலாம்

    RM55.00

    Out of stock

  • கதீட்ரல்

    பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில், கோடை மலையின் உள்ளடங்கியதொரு பகுதியில் தனித்திருக்கும் கிருத்துவ தேவாலயம் ஒன்றில் நடக்கும் இரகசியமான ஆராய்ச்சியையும் அதைப் பற்றி எழுதப்படும் குறிப்புகள் அடங்கிய பிரதி விந்தையான வகையில் மறைந்து போவதையும் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இக்கதை அறிவைச் சேகரித்துத் தொகுப்பதன் பின்னிருக்கும் மறைமுகமான அதிகாரம், அரசியல் ஆகியவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறது. தனித்துவமான கற்பனைகளைத் திருட்டிற்குப் பலி கொடுத்த ஒருத்தி, பிறரது சிந்தனைகளைத் திருடும் மேற்கத்திய மருத்துவனைத் தடுக்க, தன் வரலாற்றை இழந்த ஒருவனோடு, தனது பால்ய கனவுகளைத் தவறவிட்ட கன்னியாஸ்திரியையும் கூட்டுசேர்த்துக்கொண்டு, பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத கட்டிடத்திற்குள், முழுவதுமாய் எழுதி முடிக்கப்படாத நூலைத் தேடி அலைகிறாள்.

    RM22.00

    Out of stock

  • நட்சத்திரவாசிகள்

    புத்தாயிரத்தில் தொடங்கி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு தலைமுறை மீது அதன் கருதுகோள்கள் , சரிநிலைகள் , பண்பாடு , பொருளாதாரம் எனப் பல்வேறு வகைகளில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்திய துறை என்று தகவல் தொழில்நுட்பத் துறையைக் கூற முடியும் எல்லாப் புதிய மாற்றங்களையும் போலவே இதுவும் கொண்டாட்டங்களுடன் சிக்கல்களையும் சிடுக்குகளையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது

    RM29.00

    Out of stock

  • என் தந்தை பாலய்யா

    மீற முடியாத சமூக எல்லைகள், மன எல்லைகள், சமூக – பொருளாதார – கலாச்சார வெளிகள், சாதிகளுக்கிடையேயான உறவுகள், அதன் சட்டதிட்டங்கள், வாழும் வழிகள், விதங்கள், பேரங்கள், சமரசங்கள், லட்சியங்களோடு பின்னடைவுகளையும் கொண்ட தீண்டத்தகாதவர்களின் தனித்துவம் மிகுந்த உலகத்தின் பல்வேறு முகங்களைப் பிரித்துப்பார்க்கும் முயற்சி ‘என் தந்தை பாலய்யா’. தீண்டத்தகாத ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சமூகப் பாகுபாடுகளுக்கும் ஒடுக்கும் சாதிய முறைகளுக்கும் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் ஏளனப்படுத்தலுக்கும் அவமதிப்புக்கும் எதிரான போராட்டத்தின் வரலாற்றுப் பதிவாக இந்தப் புத்தகம் இருக்கிறது. சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் தனது நிதர்சனமாக அதை உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் இந்தப் புத்தகம் வெளிக்கொணர்கிறது.

    – எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ்

    RM32.50

    Out of stock

  • என் கதை

    என் கதை

    கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.

    சச்சிதானந்தன் (மலையாளக் கவிஞர்)

    RM19.00

    Out of stock