Showing 21–40 of 117 results

  • பொன்னுலகம்

    உடனிருப்பவன்’ தொகுப்பின் கதைகளைத் தொகுத்தபோது இறுக்கமான மனநிலையிலிருந்து வெளியேறியதான, என் ஆழத்தின் பல சிடுக்குகளைச் சொல்லிவிட்டதான ஓர் எடையின்மை மனதில் தோன்றியது. ஆனால் இத்தொகுப்பின் கதைகளை விட்டு வெளியேறுவது உண்மையில் துயரம் தருவதாக இருக்கிறது. நானே இக்கதைகளின் சிறு தருணங்களை எடுத்து வைத்து அவ்வப்போது கொஞ்சிக்கொள்கிறேன். அந்தக் கொஞ்சலை நீடித்துக்கொள்ளவே நான் இக்கதைகளைத் தொகுக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேனோ என்று தற்போது சந்தேகம் தோன்றுகிறது. ஆனால் எழுதப்பட்ட கதைகள் வாசகர்களுக்கானவை. இவற்றை வாசகர் மத்தியில் கொண்டுவிட்டு இம்மனநிலையிலிருந்து வெளியேறி அடுத்து என்னவாக உருமாற்றம் அடையவிருக்கிறேன் என்று அறிந்துகொள்ள ஒரு மெல்லிய பரவசத்துடனும் நடுக்கத்துடனும் காத்திருக்கிறேன்.

    RM18.00
  • தலைப்பில்லாதவை

    யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான ‘மணற்கேணி’ 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த நூலாக மணற்கேணியைக் குறிப்பிடலாம். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு வெளிவரும் இரண்டாவது குறுங்கதைத் தொகுப்பான ‘தலைப்பில்லாதவை’ முந்தைய நூலின் தொடர்ச்சியாகவும், விலகி அடைந்த வளர்ச்சியாகவும் காணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட பக்க அளவுக்குள் கச்சிதமான சொற்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்ற அளவில் முன்னதன் தொடர்ச்சி. ஒரே பாத்திரத்தை மையமாகக் கொண்ட கதைகள் என்பதிலிருந்து மாறுபட்டுப் பல முகங்கள், பல குரல்கள் கொண்ட கதைகளாக அமைந்திருப்பது விலகல். முதல் தொகுப்பைவிட அதிகமான எண்ணிக்கையில் கதைகள் என்பது வளர்ச்சி. படிக்க சுவாரசியமானவை, படித்த பின் யோசிக்க வைப்பவை என்பன இரண்டு தொகுப்புகளுக்குமான பொதுமை. ரத்தினச் சுருக்கமான, நயமான வரிகளிலான விவரணை, உரையாடல்களில் குவிமையத்தை விட்டு விலகாத இறுக்கம், அடிப்படை விவரிப்பின் சுழிக்குள் வாசக மனத்தை ஈர்த்துவிடும் கூறுமுறை – இவை இந்தக் குறுங்கதைகளின் இயல்புகள். புதிய இலக்கிய வடிவமாகக் குறுங்கதைகள் முன்வைக்கப்படும் இன்று சிறுகதை அளிக்கும் வாசிப்பு அனுபவத்தை வழங்கும் சீரிய முயற்சியாக யுவன் சந்திரசேகரின் கையடக்கக் கதைகளைச் சொல்லலாம். இந்த வகைமையின் தனித்துவமான முன்னெடுப்பாகவும் இந்தத் தொகுப்பைக் காணலாம்

    RM55.00
  • விலாஸம்

    “திருச்செந்தாழையிடம் புதியதொரு கதை சொல்லல் உருவாகியிருக்கிறது. அதாவது, புதிய காலத்தையும் புதிய அசைவையும் எழுத்தின் மூலமாக உருவாக்குதல் என்று சொல்ல வேண்டும். 2000க்குப் பின்பு தமிழில் எழுதப்பட்ட அத்தனை நவீன இலக்கியப் படைப்புகளிலும் திரைப்பட மொழியின் சாயல் இருப்பதைக் காண முடியும்.

    RM27.50
  • சீன லட்சுமி

    லதாவின் சிறுகதைகள் நவீன பெண்களின் அடையாளப் பரிணாமங்களை பிரகடனமில்லாமல் முன்வைக்கின்றன. அலிசா, நீலமலர், போராளி அக்கா, ஆய்வாளர் வெவ்வேறு வயது காலம், சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படுபவர்கள்.

    RM16.00
  • எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது

    எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். அதிலிருந்து கிடைக்கும் தொகையைக்கொண்டு ஆதரவற்றோர் இல்லம் நடத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தன் கனவு என்றும் சொல்கிறார். நோபல் பரிசு, புக்கர் பரிசு, ஞானபீடம், சாகித்திய அகாதமி, விஷ்ணுபுர விருது, விளக்கு விருது, இலக்கிய தோட்டம், கலைமாமணி, தமுஎகச விருது, கலையிலக்கிய பெருமன்ற விருது, பபாசி விருது, ஜீரோ டிகிரி தமிழரசி விருது, கண்ணதாசன் விருது, ஆத்மாநாம் விருது, சுந்தர ராமசாமி விருது, ராஜமார்த்தாண்டன் விருது வாசகசாலை விருது, ஸ்பேரோ தொடங்கி உள்ளூர் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், செஞ்சிலுவை சங்கம், வரை எந்த அமைப்புமே அவரை விருதுக்கு பரிசீலித்ததில்லை என்பதையே தனக்கான மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறார். ஏற்றத்திலும் எதிர்காற்றிலும் மிக வேகமாக மிதி வண்டி ஓட்டுவதில் தனித்திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றபடி குழந்தைகள் நாய்கள், பூனைகள் , மலர்கள், மழை , மலை போன்றவை தனக்கு கடும் ஒவ்வாமை அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பு துறப்பு- இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைமாந்தர்கள் வாசகர்களுக்கு தற்போது வாழ்கின்ற அல்லது முன் எப்போதோ வாழ்ந்த ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு நினைவுபடுத்தினால் (படுத்தும்) அது தற்செயலானதே. அதனால் புண்பட்டு துன்பமடைய விரும்புபவர்கள் தாராளமாக அடைந்துகொள்ளலாம். அதற்கு கதையாசிரியரோ, தொகுப்பாசிரியரோ பதிப்பகமோ, விற்பனையாளரோ, காலமோ, ஊழோ, கடவுளோ பொறுப்பல்ல..

    RM15.00
  • புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – 2020 பரிசு பெற்ற குறுநாவல்கள்

    வா.மு.கோமு, நாராயணி கண்ணகி போன்ற அனுபவமுள்ள எழுத்தாளர்கள் ஒருபுறம் இருக்க, அண்மையில் தமது எழுத்து மூலம் தங்களை நிரூபித்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகளான மணி எம்.கே மணி, சுரேஷ் பிரதீப், மயிலன் ஜி சின்னப்பன், மலர்வதி, எம்.எம்.தீன் ஆகியோர்களுடன் புதிதாக எழுத வந்திருக்கும் அ.மோகனா, பாலாஜி பிரசன்னா, பிகு என.. படைப்புலகில் அவரவர் திறனுக்குரிய வாய்ப்பை வழங்கிய போட்டியாக புதுமைப்பித்தன் நினைவுக் குறுநாவல் போட்டி-2020 நிறைவுற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. அவ்வகையில் எழுபது சதவீதம் இளம்படைப்பாளிகள் வெற்றி பெற்றிருப்பதிலிருந்து எங்கள் புது யுகத்தின் முகங்கள்’ எனும் குரல் ஒலிப்பதைக் காண முடிகிறது.

    RM75.00
  • எழுபது கதைகள்

    பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் கதைத்துவ அக்கறைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்ஞையாக அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. முருகன் கதைகள் கிராமத்துச் சூழலை யதார்த்தவாதக் கதைப் பாணியில் ஒரு புகைப்படப் பிரதியைப்போலச் சித்தரிக்கும் தன்மை கொண்டவையல்ல. அதில் தனக்கு விருப்பமோ ஈெடுபாடோ நம்பிக்கையோ இல்லை என்று முருகனும் ஒரு நேர்காணலில் சொல்கிறார். அவர் தன் கதைக் கிராமங்களை ஒரு விசேஷமான இடத்தில், நிலையில் வைக்கிறார். அதாவது அவருடைய பெரும்பாலான கதைகளில் இடம் பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்ளோ அல்லது ஞாபகங்களிலோ அல்லது உணர்விலோ கிராமங்கள் உள் பொதிந்து வைக்கப்படுகின்றன. – பா.வெங்கடேசன்

    RM74.00
  • கொரோனா காலம்

    இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல், நம்பிக்கை என வெவ்வேறு வகைமையால் ஆன கதைகளால் இந்த தொகுப்பு முக்கியம் பெறுகிறது.

    RM17.50
  • ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை

    Music குறிப்பாக Jazz தவிர்க்கவியலாமல் முரகாமியின் கதைகளில் வருவது போல ஜீவ கரிகாலனுக்கு ஓவியம். தொகுப்பில் பல கதைகளில் ஓவியம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகின்றது. ஒரு சைக்கோ பற்றிய கதையில் கூட ஓவியம் தவிர்க்க முடியாது இடம் பெறுகிறது. ஜீவ கரிகாலன் எடுத்துக் கொள்ளும் கதைக்களங்கள் மட்டுமில்லை, கதைகளும் வித்தியாசமானவை. ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முரகாமி எழுதியது என்றால் பாதிப்பேர் நம்பிவிடுவார்கள். திருமுகம் கதையின் நடை அதற்கு முற்றிலும் வேறானது. அது போலவே பல கதைகள் ஒரே எழுத்தாளரின் சாயலை இழந்து நிற்பவை.
    By the same Author

    RM18.00
  • இரு கலைஞர்கள்

    இந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.

    RM22.00
  • முதுநாவல்

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.

    RM33.00
  • பொலிவதும் கலைவதும்

    இக்கதைகள் குறுகிய காலகட்டத்தில் தொடர் உளஎழுச்சிகளால் உருவாக்கப்பட்டவை. அத்தகைய காலகட்டம் அரிதாக நமக்கு வாய்த்து மறைந்துவிடுகிறது. முகில்வண்ணமென கொஞ்சநேரம் எஞ்சியிருக்கிறது. எண்ணுகையில் இனிதாகிறது. இக்கதைகளும் அப்படி எண்ணத்தில் இனிக்கின்றன. உறவு, பிரிவு, கண்டடைதல், கண்நெகிழ்தல் என இங்கு நிகழும் வாழ்க்கையின் வண்ணங்கள் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. எத்தனை எத்தனை மனிதர்கள் என்ற எண்ணமே இப்போது இவற்றை வாசிக்கையில் தோன்றுகிறது.வாழ்க்கையின் வண்ணங்கள் அழகியவை. – ஜெயமோகன்

    RM32.00
  • துளிக் கனவு

    என் உள்ளத்தில் எப்போதும் சிறுகதையே ஆனாலும் அது பெரியவற்றை ஆதாரமானவற்றை நோக்கி எழவேண்டும் என்னும் எண்ணம் உள்ளது ஆகவே ஒரு புன்னகையாக ஒரு மெல்லிய துயராக ஓர் எளிய கண்டடைதலாக நிகழ்வனவற்றை கதையாக ஆக்க நான் முயல்வதில்லை அவை வரும்வகையில் அப்படியே எழுதி கடந்துவிடுகிறேன் ஆனால் பின்னால் திரும்பிப்பார்க்கையில் அவற்றில் பல அரிய கதைகள் என்பதைக் காண்கிரேன் அவற்றில் நான் எண்ணாதவை எழுந்து வந்திருப்பதையும் சொல்லப்பட்டவை சொல்லப்படாதவற்றை நோக்கி ஒளிகொண்டிருப்பதையும் உணர்கிறேன் அவை சிறுகதைகளே என்று தோன்றுகிறது இத்தொகுதியிலுள்ளவை அத்தகைய சிறுகதைகள்.

    RM14.00
  • அறம் (ஜெயமோகன்)

    இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்ட◌ாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. – ஜெயமோகன்
    ஜெயமோகனின் இக்கதைகள் அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்தவை. பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஒர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன. இக்கதைகளின் பிரசுரம் அவர்களை வாழ்க்கையின் ஒளிமிக்க பக்கங்களை நோக்கித் திருப்பியது. தமிழிலக்கியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வு என இக்கதைகளின் தொடர் பிரசுரத்தை சொல்லலாம்

    RM40.00
  • வெண்கடல்

    உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.

    RM20.00
  • ஜப்பானிய மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

    ஜப்பானிய இலக்கியத்தின் பக்கங்களைத் தேடிச் செல்ல விரும்பும் எந்தவொரு வாசகனுக்கு இந்த தொகுப்பு மிகச்சிறந்த வழிகாட்டியாக ஓரளவுக்கு இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

    RM40.00
  • நெட்டுயிர்ப்பு

    “மண்சாலையில் உதிர்ந்து கிடக்கிற கொன்றைப் பூக்களைக் கனவு காண்கிற காலமொன்றில், அரளிப் பூ மணத்தையும் அது பரிசளிக்கிற, முச்சந்தியில் உதிர்ந்து மிதிபடுகிற சாமந்திப் பூக்களையும் காட்சிப்படுத்திய வகையில் இக்கதைகள் கவனிக்கத்தக்கவை.”

    RM20.00