-
-
-
பட்டாளத்து வீடு
செவ்வண்ண துண்டுப் பிரசுரத்தோடு அலையும் மனங்களுக்குள்ளும், அறிவை உரசிப் பார்த்துக்கொண்டேயிருக்கும் ஜீவராசிகளுக்குள்ளும் கனிந்து பெருகும் அன்பின் ஈரம் கசியும், எளிய மொழியிலான கதைகள் இவை. தேவதைகளெனவும் பேய்களெனவும் மட்டுமே பெரும்பாலும் கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள் அற்புத மானுடர்களாக அபூர்வமாய் மிளிர்கிறார்கள். உள்ளீடாய் இழையோடும் துயரத்திற்கு இணையாக பகடி போர்த்திய இக்கதைகளுக்குள், அரசியல், கலை – இவற்றில் எதன் கையைப் பற்றிக்கொண்டு செல்வதென்கிற குழப்பமின்றி, இரண்டின் கரங்களையும் நாம் பிடித்துக்கொள்கிறோம். இறுதியில் அவையிரண்டும் விடாது நம்மையும் பற்றிக்கொள்கின்றன.
-
மண்டை ஓடி
ம.நவீன் நல்ல கதை சொல்லி என்பதையும், கதையை எப்படிச்சொல்ல வேண்டும், எந்த மொழியில், எந்த அளவில், சொல்லவேண்டும் என்பதை நன்றாக அறிந்தவர் என்று ‘மண்டை ஓடி’ – தொகுப்பு சொல்கிறது. – இமையம்
-
-
உச்சை
காலாகாலகாமாக இருந்துவரும் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான பிணைப்பையும், இந்தப் பிணைப்பினால் மனிதன் பெறும் உயிர்ப்பையும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லும் நவீனின் கதைகள் தொன்மத்தின் தொடர்ச்சியாக மலேசிய இலக்கியத்திற்கு பலம் சேர்க்கின்றன. – பவித்திரா
RM22.00 -
மா.சண்முக சிவா சிறுகதைகள
மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும். – இமையம்
-
நள்ளிரவில் சூரியன்
ஒரு கட்டத்தில் லத்தீன் அமெரிக்காவின் புதுமையான எழுத்துகள் புயல் போல நவீனத் தமிழிலக்கியச் சூழலில் நுழைந்தன. ஏற்கெனவே எழுதிக்கொண்டிருந்தவர்கள் திகைத்தார்கள். அப்போதைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்விதம் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனக்கென்றே அந்தச் சூழல் ஏற்பட்டதோ என்ற ஆனந்தத்தில் நான் இருந்தேன். ஏனென்றால், எனக்கு உகந்த எழுத்துப் பாணியாக அவை இருந்தன. மையமற்ற கதை; புதுமையான உத்தி; மாறிய எழுத்துமுறை இவற்றை வெளிப்படுத்த தவித்துக்கொண்டிருந்த எனக்கு, ஏற்ற சூழல் அமைந்தது. இந்தச் சூழல் என்னும் முரட்டுக்குதிரையில், ஆனந்தமாகவும் லாகவமாகவும் நான் சவாரி செய்தேன் என்றே நினைக்கிறேன். – சுரேஷ்குமார இந்திரஜித்
-
கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்
இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள், முதல் வாசிப்பிலேயே நாமும் இந்தப் படைப்பில் ஏதோ ஒரு மூலையில் இருக்கிறோம் அல்லது இந்தக் கதைகள் முழுக்க நாம்தான் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றன. அடிமனதில் உறைந்துவிட்ட பழைய பாடல்கள் போல, நம்மை விடாது தொடர்ந்துகொண்டிருக்கும் இக்கதைகளின் கலைத்தன்மை செய்நேர்த்தியால் வந்ததன்று, உண்மையின் தரிசனத்தால் வந்தது!
– பாரதிபாலன்
-
கண்டி வீரன்
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை.
-
சூடிய பூ சூடற்க
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
-
-
திசையெல்லாம் நெருஞ்சி
மொத்தமாக மூன்று கதைகள். மூன்றும் இன்றைய எதார்த்தத்தை அழகாக பதிவுசெய்வதால் நூல் இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது. குறிப்பாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து திடீர் நகரவாசியான மணமகனின் மனவோட்டத்தில் நகரும் “உருமால் கட்டு” கதை மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. மற்றோன்று “இரட்சணியம்” – பதின்மவயது விடலை பையனின் குழப்பங்களைப் பதிவு செய்வதாகவும், “திசையெல்லாம் நெருஞ்சி”- எங்கும் களையாக மண்டிக்கிடக்கும் சாதியகட்டுமானத்தை உடைத்து காட்டுவதாகவும் இருக்கிறது.
வாசர்களை அயற்சியடையச் செய்யாத எளிமையான எதார்த்த நடையில் எழுதப்பட்ட கதைகள் இவை. வாய்பிருந்தால் வாசியுங்கள்.
-
வெண்ணிலை
தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
‘வெண்ணிலை‘யை தமிழின் சிறந்த சிறுகதைத்தொகுதிகளில் ஒன்று என்று ஐயமறக்கூறலாம். முற்றிலும் யதார்த்த தளம் சார்ந்த நேரடியான கதைகள் இவை. ஆனால் மண்ணால் கைவிடப்பட்ட எளிய விவசாயிகளின் வாழ்வின் படிப்படியான சரிவை தீவிரமாகச் சொல்வதன் வழியாக சமகால வரலாற்றின் பதிவாக நிலைகொள்கின்றன. அத்துடன் மண்ணை இழந்த விவசாயியின் ஆன்மீகமான வீச்சியைச் சொல்வதன் மூலம் பேரிலக்கியத்தகுதி பெறும் சில கதைகளும் இத்தொகுப்பில் உள்ளன (-ஜெயமோகன்).
சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட விவசாயம், மாறிவரும் பண்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டவை இக்கதைகள். வாழ்க்கையின் கொதிநிலைத்தருணங்களை விரிவான சித்தரிப்புகளுடன் உளவியல் நுட்பத்துடன் விவரிக்கின்றன. பேரிலக்கியவாதிகளிடமிருந்தே மனோதத்துவ அறிஞர்கள் தங்கள் கருதுகோள்களுக்கான மூலவிதையைப் பெறுகிறார்கள். உளவியல் வகைப்படுத்த இயலாது திகைத்து நிற்கும் புதிர்களிலிருந்தே தனது இலக்கியப் பயணத்தை தொடங்குவதை இயல்பாக்க் கொண்டிருக்கிறார் வேணுகோபால்.
-
-
அப்பாவின் வேஷ்டி
எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். எனக்கு அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும். அப்பாவைக் குறித்த பல கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய முடிந்தது இதுதான். அதனால்தான் இந்தத் தொகுதிக்கு அப்பாவின் வேஷ்டி என்று பெயர். -பிரபஞ்சன்
-
உச்ச வழு
எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம்.
‘இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன’.
RM20.00 -
பிரதமன்
வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது. அந்த பெருமொழியின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக, இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக் கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர் செய்துகொண்டவை.அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர் வினைகளும்கூட. அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரண மனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன். ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை. வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.
RM18.00 -
வண்ணநிலவன் சிறுகதைகள்
1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. எமிலி ஜோலா எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது.
-
ஆ.மாதவன் கதைகள்
ஆ.மாதவன் ஒரு நூதனமான மலரினம். மூவகைப் பசியையும் எழுதியிருக்கிறார். மூவாசையையும் எழுதியிருக்கிறார். எங்கும் பிரச்சாரம் இல்லாமல், கோஷம் இல்லாமல், ஆபாசம் இல்லாமல், பகட்டு இல்லாமல், மேதாவிலாசம் புலப்படுத்தாமல், வாசகனை வெகுட்டாமல்…
அவரது மொழி மணிப்பிரவானம் இல்லை, மணிமிடைப்பவளம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அற்புதமான மொழி அவரது சம்பத்து. அவர் கையாண்ட மலையாளச் சொற்கள் பெரும்பாலும் ஆதித் தமிழ்ச் சொற்கள். அவருக்கு என்று ஒரு மொழி நேர்த்தியுண்டு. அது மலையாளத்து காளன், ஓலன், எரிசேரி, அவியல், புளிசேரி, புளியிஞ்சி, சக்கைப் பிரதமன், பாலடைப் பிரதமன், உப்பேசி போல தமிழுக்குப் புதிய மணம், புதிய சுவை