-
சக்தி யோகம்
3மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக்கதைகள்.
-
மண்ட்டோ படைப்புகள்
இந்திய துணைக்கண்டப் பிரிவினை பற்றி வேறு பல எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தச் சிதைவை மண்ட்டோ போல் வெளிக்கொணரவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவர் ஆபாசம் என்ற நிழல் கொண்டவராகத்தான் கருதப்பட்டார். மண்ட்டோவின் நோக்கம் ஆபாசமல்ல, குரூரமல்ல என்று நிரூபிக்க வேண்டியிருந்தது. -அசோகமித்திரன்
-
21ஆம் நூற்றூண்டுச் சிறுகதைகள்
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறுவேறு கோணங்களில் விமர்சிக்கின்றன. சமகால தமிழ்க் கதைகளின் நோக்கும் போக்கும் இத்தொகுப்பின் வழியே புலப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நவீன புனைவெழுத்தில் இடையறாது இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா இதைத் தொகுத்துள்ளார்.
-
-
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெளியான இதழ்களோடும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான முதல் பதிப்புகளோடும் ஒப்பிடப்பட்டு, திருத்தமான பாடத்தோடு இந்நூல் அமைந்துள்ளது. பின்னிணைப்புகளில், கதைகளை வெளியிடப் புதுமைப்பித்தன் பயன்படுத்திய புனைபெயர்கள், பதிப்புக் குறிப்புகள், பாட வேறுபாடுகள் முதலானவை இடம்பெறுகின்றன. பல்லாண்டுக் கால ஆராய்ச்சியில் உருவாகியுள்ள தொகுப்பு இது.
-
காமரூப கதைகள்
சாருநிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயலுகின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்பவிரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை அது சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல்கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.
-
அரூ அறிவியல் சிறுகதைகள் 2020
தமிழில் அறிவியல் புனைவுகள் சொற்பமாகவே எழுதப்பட்டு வருகின்றன. Virtual Reality Headsetஐ மாட்டிக் கொண்டதும் அது எப்படி நம்மை முற்றிலும் புதிய வேறோர் உலகத்துக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் அறிவியல் புனைவும் நாம் இதுவரை அறிந்திராத உலகங்களைக் காண்பிக்கின்றது. அந்த வகையில் உள்ள 15 கதைகளும் வாசகர்களுக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தரக் கூடியவை. சாரு நிவேதிதா
-
அரூ அறிவியல் சிறுகதைகள் 2019
சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. தமிழ்ப் புனைக்கதை உலகில் முற்றிலும் புதிய ஒரு தாவல் நிகழ்ந்துள்ளது என்னும் பரவசம். -ஜெயமோகன்
-
100 சிறந்த சிறுகதைகள் (2 பாகங்கள்)
ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு – எஸ்.ராமகிருஷ்ணன்
-
1001 அரேபிய இரவுகள் (ஒன்றாம் இரண்டாம் தொகுதி)
(One Thousand and One Nights) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். தமிழில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
-
அமீலா
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி “அமீலா”. சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து ‘கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது’ – என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ‘ஆழ்மனதில் அலைக்கழியுங்கள். மேல் முடியை கலைத்துவிடுங்கள்’ – என்று கதையெழுதியவர்களுக்கு விபூதி அடிக்கிறார்கள். கதைகள் பரிசோதனைக்குழாய் தவளைகள் போல விழிபிதுங்கிவிடுகின்றன. ஆனால் “அமீலா” காட்டுத்தீயினால் எழுந்தோடிய கங்காருக்கூட்டத்தைப்போல என்னுள் விழுந்து சிறு சிறு பொறிகள் ஏற்படுத்திய எழுத்தின் இயற்கையான இடப்பெயர்வுகள். அவைதான் இந்தத்தொகுப்பில் கதைகளாக வெளிவந்திருக்கின்றன.
-
அஷேரா
அஷேரா ஒரு வாழ்வை விரித்துப் பரப்பிய கதைப்பிரதியல்ல. அது தெரிந்தெடுத்த மனிதர்களுடைய ஒன்றோடொன்று ஊடும் பாவியும், விலகி வெளியேறுவதுமான கதைகளின் தொகுப்பு. முன்னும் பின்னுமான காலமும் இங்கும் அங்குமான நிலங்களின் அலைவும் பிரதி முழுவதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மனிதர்கள், பெண்ணுடனான காமத்தில் சுகித்திருக்கிறார்கள். அவளுடைய நேசத்தைப் புறந்தள்ளுகிறார்கள்.
கேலி செய்கிறார்கள், தாய்மையின் மடிச்சூட்டிற்காக ஏங்குகிறார்கள், குழந்தைகளை வெறுக்கிறார்கள், பிரியத்தை எதிர்கொள்ளத் திராணியற்று அதை அலட்சியமாக்கித் தப்பிக்கிறார்கள். யாருடையதோ காலடியில் வீழ்கிறார்கள். யாரையோ காலடியில் வீழச் செய்கிறார்கள், காட்டிக்கொடுக்கிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள், மன்னிப்பை இரக்கிறார்கள், துரோகமிழைக்கின்றார்கள், பிறழ்கிறார்கள்.
அப்போதெல்லாம் அமானுஷ்யமாக ஒரு துப்பாக்கி செவிக்கெட்டாத மாயச்சத்தத்துடன் சன்னங்களைத் துப்பிக்கொண்டிருந்தது. கந்தகம் காட்சியற்ற நெடியாகப் பரவிக்கொண்டிருந்தது.
நஞ்சு ஊறிய விதையிலிருந்து முளைத்த ஒரு பெரு விருட்சத்தின் பூவிலும், காயிலும், விழுதிலும், விறகிலும் விஷமேறியிருப்பதைப்போல, நம்முடைய நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலத்திலிருந்து இலக்கியம் எப்படித் தன்னை விடுதலை செய்துவிட முடியும்?
-
போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
போர்ஹெஸ் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்: (தமிழில் – பிரம்மராஜன்)
மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் என்கிற படிப்பாளி லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார்.ஹோப்பன்ஹவர்,எல்லரி குவீன்,கிங்காங்,கப்பாலிஸ்டுகள்,லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட்,ஜாக் லண்டன்,புலோட்டினஸ்,ஆர்சன் வெல்ஸ்,ஃபிளாபர்,புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்ட்ன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார்.மிகக் கச்சிதமாகச் சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாக இருந்தனர்.தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ்,இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
– -எலியட் வெய்ன்பர்கர். -
மாற்றான் தோட்டம்
பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி,
வில்லியம் ட்ரவர்,
டி.ஹெச்.லாரன்ஸ்,
சல்மன் ருஷ்டி,
சிமாமந்தா இங்கோசி அடிச்சி ஆகிலவர்களின் உலகப் புகழ்பெற்ற சிறுகதைகள் தமிழில். -
ஊமைச்செந்நாய்
அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்’, ‘ஊமைச்செந்நாய்’, ‘காமரூபிணி’ போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன.
RM24.50 -
விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.
RM19.00 -
பேய்க்கதைகளும்,தேவதைக்கதைகளும்
உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும்.
RM18.00 -
சுல்தானின் பீரங்கி
நம் சமகால உலகின் சிறுகதைகளின் வீச்சு பிரமிப்பூட்டக்கூடியது. இந்த பூமியின் வெவ்வேறு மூலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வின் காத்திரமான சில குறுக்குவெட்டுக் காட்சிகளை இக்கதைகள் புனைவாக்கி நமக்குத் தருகின்றன. மொழிகளைக் கடந்து நம்மை வந்தடையும் இக்கதைகளை ஒருசேர வாசிக்கையில் உண்டாகும் அனுபவம் அலாதியானது. கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் ‘சுல்தானின் பீரங்கி’ அவரது இரண்டாவது உலகச் சிறுகதைகள் தொகுப்பாகும். மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பின் கதைகள் யுத்தம், புலம்பெயர்வு, விளிம்புநிலை வாழ்வு, இருத்தலின் குரூர அபத்தம் போன்றவற்றை மையப்படுத்தியவை. மிகச் சவாலான இலக்கிய வடிவமான சிறுகதை, வரையறுக்கப்பட்ட வெளிக்குள் சிறுகதை ஆசிரியன் நிகழ்த்தும் ஒரு புனைவுச் சாகசம் என்ற எண்ணம் இக்கதைகளின் தொனி, வடிவம், கூறுமுறை இவற்றை வாசித்தறிகையில் உறுதிப்படுகிறது. சமரசமற்றதொரு கறார்த்தன்மையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இக்கதைகள் மூலப்பிரதிக்கு மிக நெருக்கமாக அமைந்திருக்கும் அதேவேளை சரளமான வாசிப்புக்கு ஊறு தராதவை. சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளுக்கு வளமூட்டக்கூடிய தொகுப்பு இது. – அசதா
-
அந்தோன் செகாவ்: சிறுகதைகளும் குறுநாவல்களும்
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறைத்துக் கொள்ள மனித குலம் தெரிந்து கொண்டு விடுமாயின், மக்கள் மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டொழித்து விடுவார்களே, இதுகாறும் மக்கள் எவற்றில் தமக்கு எல்லாக் கேடுகளிடமிருந்தும் பாதுகாப்பு தேடிக்கொண்டார்களோ, எவற்றில் பேரின்பம் கிட்டுவதற்கான மார்க்கம் அமைந்திருக்கக் கண்டார்களோ அந்த மதத்தையும் தத்துவ ஞானத்தையும் விட்டுத் துறந்து விடுவார்களே.