-
மழைநிலாக் கதைகள்
கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக “மழை நிலாக் கதைகள்” நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள்இவை.
-
-
-
-
-
-
ஆள்தலும் அளத்தலும்
பெரும்பாலான இந்தக் கதைகள் நல்ல வாசிப்பு அனுபவம் வழங்குகின்றன. ஈர்ப்பான கூறுமொழி. சொந்த அனுபவங்களா அல்லது சாட்சியாக நின்றவையா என்று அனுமானிக்க முயல்வது வாசகனின் வேலை அல்ல. ஆனால் நம்பகத்தன்மைக்கு என்றொரு தனியான வசீகரம் உண்டு.
சம்பிரதாயமான சில புத்திமதிகள் கூறுவார்கள், வழக்கமாக முன்னுரை எழுதுவோர். அதனைத் தவிர்க்க விரும்புகிறேன். ‘அழுதாலும் பிள்ளை அவள் தானே பெறனும்!’ என்பது நம் இலக்கியக் கொள்கை.காலத்தால் தொடரும் முயற்சியும், ஊக்கமும், உழைப்பும், நுட்பமான பார்வையும், சமநிலைச் சீர்கேடாமையும், மொழித்திறனும், கலைத்தேர்ச்சியும் மேலும் காளிப்ரஸாத்துக்கு வாய்க்க இந்தக் கலைமகள் வழிபாட்டுத்தினத்தில் வாழ்த்துகிறேன்!
– எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
-
துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை
இறுதியாக ஒரு துப்பாக்கிச்சூடு நிகழும் வரை நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். குறையாத இடைவெளியில் புல்லட்டுகள் ஒவ்வொன்றும் மற்றொன்றை முடிவில்லாமல் துரத்துகின்றன. நான்காவது புல்லட் என் நெற்றியின் வலது ஓரத்திலிருந்து கிளம்பி, வெற்று வெளியில் மற்ற புல்லட்டுகளைத் துரத்துகிறது. அது நெற்றியின் இடது வெளிப்புறத்திலி ஓட்டைப்ரு பிளக்கும்ந்து கோழிக்குஞ்சாய் தலை நீட்டியது வரை ஒரு நெடுங்காலப் பயணத்தை மின்னல் வேகத்தில் முடித்ததை மட்டுமே என்னால் நினைவு கூர முடிகிறது. (less)
-
ஒளி
சுவிட்ஸர்லாந்தில் ஆய்வுப் பணி நிமித்தமாக வசிக்கும், மதுரையைச் சேர்ந்த சுசித்ராவின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘ஒளி’. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதிவரும் இவர், சங்கக் கவிதைகள் உட்பட சில மொழிபெயர்ப்புகளையும் செய்திருக்கிறார். இவையெல்லாம் இவருடைய கதைகளுக்குப் பலம் சேர்க்கின்றன. யதார்த்தம், மிகை யதார்த்தம், அறிவியல், தத்துவம் எனப் பல பொருண்மையிலான கதைகள் தொகுப்பில் உள்ளன. தொகுப்புக்கு ஒரு முகம் இல்லை. இது சுசித்ராவின் பலம். தலைப்புக் கதையான ‘ஒளி’, இணைய இதழில் வெளியானபோதே பரவலாகக் கவனம் பெற்றது; பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும், குழந்தைகளின் உலகமும், பெண்களின் உலகமும் பல கதைகளில் நுட்பமாகப் படிந்திருக்கின்றன. மொத்தத்தில், சுசித்ராவுக்கு இது நல்ல ஆரம்பம்.
-
டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல்
எனது மகள் மஞ்சு செவன்த் stdஇல் இருந்து டபுள் பிரமோஷன் ஆகி நயன்த் stdக்கு போகிற வழியில் எனக்கு வாய்க்கரிசி போட்டு ஒரு சொம்பில் பாலும் ஊட்டிச் சென்ற சந்தோஷத்தில் திடுக்கிட்டு எழுந்த போது அவர்களைப் பார்த்தேன்.
சிறுகதை
-
CASS அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட கதையில் சொல்லப்படாதவை
எங்களூரின் மொழியும், இந்தத் தமிழை நாங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்கு எப்போதும் உவப்பானது. அவற்றை எழுதிக்கடக்கிற போது நான் அடைகிற ஆனந்தம் அளவிட முடியாதது, அவற்றின் எச்சங்களை நான் பதிவுசெய்ய வேண்டாமா? போலவே அரேபிய பாலைவளங்களில் அலைந்த திரிந்த ஆறாண்டுகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஆச்சரியங்களையும் நான் எங்கே போய் வெளிப்படுத்துவேன்!? இப்போது. நீலக்குளிர் பிரதேசம் எனக்குள் பொழிகிற, உறைய வைக்கும் இந்தக் குளுமை எனக்கானதுதானா அல்லது நான் “வேரோடி’ எனது கரையை போய்ச்சேர்ந்து விட வேண்டுமா? கடந்து வந்த நிலமெல்லாம் பெரும் ஆச்சரியங்கள்தான். ஆகயே நியங்களான எழுதுவதுதான் எனது பணியாக இருக்கிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தக் கதைகளுக்குள் உலவுகின்ற மனிதர்கள் எங்கிருந்து வந்து சேர்ந்தவர்கள்! அவர்களுக்கும் எனக்குமான பந்தம் என்ன என்கிற கேள்விகள்தான் என்னை அலைக்கழிக்கின்றன.
-
எரி
நாகபிரகாஷின் இத்தொகுப்பிலுள்ள கதைகளின் சரடாக அமைந்திப்பது சிறுவர்களின் உலகம். இளமையில் உழைக்க நேர்ந்தவர்களின் மனக்கோலங்களும் அவற்றின் வெவ்வேறு திரிபுகளுமே கதைகளாக அனுபவமாகியுள்ளன. பதின்பருவத்தின் துயர்பாடுகளைச் சொல்லும் நாகபிரகாஷின் கதைகள் எளிமையான மொழியில் அடர்த்தியாகவும் சொல்நேர்த்தியுடனும் அமைந்திருப்பவை. அனுபவங்களின் உண்மைத்தன்மை கதைகளுக்கு பலம் சேர்த்துள்ளன. சித்தரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் தமிழ் சிறுகதையில் சொல்லப்படாதவை என்பதும் கவனிக்கத்தக்கது. ஒன்பது கதைகளுமே வாழ்வின் பல்வேறு தருணங்களை முன்னிறுத்துபவை. ஒருவகையில் ஒரே வாழ்வின் வெவ்வேறு காட்சிகளை சித்தரிப்பவை. பாசாங்குகள் எதுவுமில்லாமல் மிகையான விவரிப்புகளோ உரையாடல்களோ இல்லாமல் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் விதத்தில் அவை வாசகனுக்கு நெருக்கமானவையாய், தான் கண்ட வாழ்வின் சில கணங்களை நினைவுறுத்துவதாய், தன் அனுபவத்தின் சில துளிகளை மீட்டுத் தருவதாய் அமையக்கூடும். அதுவே இக்கதைகளின் வரவுக்கு நியாயம் செய்வதாக இருக்கும். – எம்.கோபாலகிருஷ்ணன்
-
கூடு & பிற கதைகள்
இத்தொகுப்பிலுள்ள கதைகள் பலவும் சிறுகதைக்கான இலக்கணத்துக்குள் பொருந்திவரக்கூடியவை. சொல்லாது மறைத்த பகுதிகளால் மேலும் கனம் கூடியவை. வெவ்வேறு புதிய நிலக்காட்சிகளையும் காடுகளின் வசீகரமான சித்திரங்களையும் கொண்டிருப்பவை. மனித வாழ்வின், உறவுகளின் தீராத புதிர்களும் அவற்றில் எஞ்சி நிற்கும் நம்பிக்கையுமே இந்தக் கதைகளுக்கு ஆதாரமாய் அமைந்திருக்கின்றன. எண்ணிக்கையிலும் எடுத்துக்கொள்ளும் களங்களிலும் சொல்கிற உத்திகளிலும் கலைச்செல்வி காட்டும் முனைப்பும் தீவிரமும் வியப்பைத் தருகின்றன. இந்த முனைப்பும் தீவிரமும் தொடரும்போது அவரது படைப்புகளின் எண்ணிக்கையும் கனமும் கூடும். வாசகர்களிடத்தில் அதிக கவனம் பெறும். தன்னை கண்டடைய எழுதிய கதைகள் பிறருக்கும் அவ்வாறே உதவிடக்கூடும். அதுவே அவரது எழுத்துக்கு அர்த்தம் சேர்க்கும்.
– எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்
-
-
மூங்கில்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ
எண்ணாம்ம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ
பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி
சுட்ட சொல்லு சொல்லு வெலக்கு தாயி
சுட்ட சொல்லு வெலக்கு தாயி
புத்தி கெட்டுப் போனோமோ தடம் மாறிப் போனோமோ
நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன்
பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன்
கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ
குழி நெறைய வள தாறேன், பிச்சமால கெட்டித் தாறேன்
கருமாரி முத்தாரம்மா பற்றகாளி காட்டாளம்மா
கொலசாமி வந்து நில்லு கொலத்தக் காத்து நில்லு”
சிறுகதையிலிருந்து
-
இந்தக் கதையை சரியாக சொல்வோம்
இவர்கள் அகதிகளாகவோ அல்ல தொழில் நிமித்தமாகவோ 80 களின் தொடக்கத்தில் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் குடிபெயர்ந்தவர்களின் முதல் தலைமுறை மக்கள். மேற்கத்திய குடிமன்களாகவே வளர்ந்தாலும் தன் வேரைக் கண்டடையும் தேடல் இவர்களுக்குள் இருக்கிறது.
இரண்டு கலாசாராங்களுக்கு இடையிலான மோதல் இவர்களுக்குள் கேள்விகள் எழுப்புகிறது. குடிபெயர்ந்தவர்கள் தன் இருப்பை நிலைநாட்டும் போராட்டத்தில் தன் பூர்வீகத்தை மொத்தமாக மறந்து மேற்கத்திய வாழ்வில் ஒன்றிணையும் முனைப்பில் இருக்க அடுத்த தலைமுறையோ தராசுத் தட்டின் நடுமுள் போல இரு கலாசாராங்களையும் அளந்து பார்க்க முற்படுகிறார்கள். வெற்றி பெற்றவர்களின் வெற்றிகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
ஏற்கனவே, விவாதிக்கப்படும் உறவுச் சிக்கல்கள் இவர்கள் பார்வையில் வேறொரு பரிணாமம் பெறுகிறது.அப்படியான சில புலம்பெயரிகளையும் அவர்களின் சிறுகதைகளையும் தமிழ் வாசகப் பரப்பிற்கு அறிமுகப்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்
-
துயிலாத ஊழ்
யுத்தம், பேரழிவு, அகதி வாழ்வு, இயக்கங்கள் மீதான் விமர்சனம், போராடும் வேட்கை, அலைந்துழலும் புலம்பெயர் துயர், தாயகத்தினுள் படும் அல்லல், விடுதலைக்காய் ஏங்கும் கதியற்ற தமிழ் அறமென இத்தொகுப்பின் கதைகள் ஒவ்வொன்றும் ஏதோவொரு வகையில் ஈழ நிலத்தின் உளவியலை அதனதன் நியாயங்களோடு புனைவின் துணை கொண்டு நிலைநிறுத்துகிறது. ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு – எதிர்ப்பு – வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது “துயிலாத ஊழ்” புதிய பண்பாட்டு மரபையும் சேரவே ஆரோக்கியமான விவாதங்களையும் பிரசவித்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான ஈழ நிலத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர்களுள் இந்த தொகுப்பிலுள்ளவர்களும் அடங்குவர். ஈழ அரசியலின் இயக்க முகாம்களின் மனநிலை கடந்து தொகுக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பானது இலக்கிய உலகில் புதியதொரு பண்பாட்டையும் நம்பமறுக்கும் விசாலமான புதிய கூட்டையும் தோற்றுவித்திருக்கிறது.
-
கிழவனின் காதலி
போரில் மடிந்த யானைகள், குதிரைகள் மற்றும் வீரர்களின் சடலங்கள் அங்கெங்கும் அழுகி நாறிக்கொண்டிருக்கின்றன. நுண் பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் தொற்று நோய்கள் நம்மை அச்சுறுத்தும். அவற்றையெல்லாம் உண்டு பூச்சிகள் தூய்மை செய்கின்றன. சிறு சதைத் துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் உண்ண வேட்டை விலங்குகளால் கூட முடியாது. ஆனால், பூச்சிகளால் அவற்றைத் தடயமில்லாமல் தின்று ஏப்பம் விட்டுவிட முடியும்.
– ‘பூச்சி’ சிறுகதையிலிருந்து…
-
இருண்ட காலக் கதைகள்
இந்தச் சிறுகதைகளின் தொகுப்பிற்கு நண்பர் கரீம் ‘இருண்டகாலக் கதைகள்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இடம்பெற்றுள்ள அனைத்தும் சமகாலத்தைப் பேசும் கதைகள். சம காலத்தில் நாம் எல்லோரும் எதிர்கொண்டுள்ள எதார்த்தங்களைச் சொல்லும் கதைகள். இளங்கோ கிருஷ்ணனின் “படை” யும் கூட முகமது பின் துக்ளக் காலத்தைப் பேசினாலும் துக்ளக்குகள் இன்றும் உள்ளனர் எனச் சொல்லும் படைப்புத்தான். அந்த வகையில் நாம் வாழும் இக் காலம் ஓர் இருண்ட காலம் என்றாகிறது.. இதற்கெல்லாம் என்ன முடிவு, நாம் எங்கு போய்க் கொண்டுள்ளோம் என நம் யாருக்கும் புரியவில்லை என்பதைத்தான் இந்தப் படைப்புகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். இந்தச் சூழலை பதினேழு சமகால எழுத்தாளர்கள் எவ்வாறு காண்கின்றனர் என்கிற வகையில் இத் தொகுப்பு முக்கியத்துவம் பெறுகிறது. – அ. மார்க்ஸ்
-
துண்டிக்கப்பட்ட தலையின் கதை
அதிகாரத்தோடும் அரசியலோடும் நேரடித் தொடர்பு கொண்டிராதபோதும் ஒரு சமூகத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தினசரி வாழ்க்கையினூடாக நவீனத்தைப் புகுத்துவதிலும் இந்தப் பிரபஞ்சத்துக்கான பொதுவான உணர்வுகளை உருவாக்குவதிலும் கலைக்குப் பிரதான இடம் உண்டு. தற்காலச்சூழலில் அழகியல் தொடங்கி அமைதி வரை சகல துறைகளிலும் கலையின் பிரதிபலிப்புகளை நம்மால் இனங்காண முடிகிறது. குறிப்பாக முன்னெப்போதையும் விட அரசியலை கலையின் வழியே உரக்கப் பேசும் காலம் இது. கலைக்கென தனிப்பட்ட அரசியல் ஏதும் கிடையாது. மாறாக அது உலகம் சார்ந்த தனக்கான தனித்த பார்வையைக் கொண்டிருக்கிறது. அதையே நாம் அரசியல் என்றழைப்போமெனில் நியாயம் அன்பு அறம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்துவதாக அது இருக்கும். வெவ்வேறு தேசங்களின் கதைகளாக இருந்தாலும் அதிகாரத்தின் உக்கிரத்தை அது மனிதர்களிடையே உண்டாக்கும் துயரங்களை அதற்கு பதிலீடாக இருந்திருக்கக்கூடிய அன்பை விரிவாகப் பேசும் கதைகள் இந்தத் தொகுப்பிலுள்ளன.