-
பாய்மரக் கப்பல்
RM20.00பாவண்ணன் பாவண்ணனின் பாய்மரக் கப்பல் வாழ்க்கை என்னும் மாபெருங்கடலில் பயணத்தைத் தொடங்கிய ஒரு விவசாயியின் வம்ச வரலாறு. இதில் வரும் காசாம்பு, முத்துசாமி, முனுசாமி, ரங்கசாமி, ஆறுமுகம், துரைசாமி ஆகியோரை இந்தத் தேசத்தில் எங்கெங்கும் காணலாம். அனைவரும் உயிர்ச்சித்திரங்கள். இவர்கள் வழியாகத்தான் வரலாறு மெல்லமெல்ல நகர்ந்து வந்திருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையைக் கலைப் பண்புடன் சித்தரிப்பதில் கைதேர்ந்த பாவண்ணன் இந்த நாவலில் விரிந்த பின்னணியில் காலத்தின் நகர்தலைக் கதையாக்கியுள்ளார்,Only 2 left in stock
-
அல் கிஸா
RM15.00அஜ்மீரின் புனித தர்காவில் அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்ட சிறு நாவல் இது. செவ்வியல் கூறுகள் ஊடுருவும் ஒரு நவீன ஆக்கமான இதில் சூஃபி ஆன்மீகமும் ஷியாக்களின் வரலாற்றுப் போராட்டமும் நபிகளின் போர்வையின் கீழ் ஒரு மகத்தான காதலால் இணைகின்றன.
Out of stock
-
நிழல் முற்றம்
RM19.00நிழல்முற்றம்
என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்’. விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எதையும் விவரிப்பதில் எழுதும்போதும் அதற்கு எப்படியோ தடை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன்.
பெருமாள்முருக
Only 2 left in stock
-
கூளமாதாரி
RM39.00மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. ‘தீண்டத்தகாத’ பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘கிரியாமா’ பரிசுக்கான குறும்பட்டியலில் ‘கூளமாதாரி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய ‘Seasons of the Palm’2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. தற்போது இந்நாவல் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
Out of stock
-
மாதொருபாகன்
RM24.00இந்த நாவலைப் படிக்கத் தொடங்கியதும் முழுமூச்சாகப் படித்துவிட்டே கிழே வைக்க வேண்டும் என்னும் வகையில்தான் இருந்தது. அதுவும் நம் கவனம் முழுவதையும் ஈர்த்துக்கொள்ளும் வகையில் இருந்தது. இந்தக் கதையைப் படித்த பிறகு மனதில் தோன்றியது என்ன? குறைந்தபட்சம் எங்களைப் பொருத்தவரையில் தங்களுக்குள் அமைதியடைந்தவர்கள் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் என்னும் தகுதியைச் சமூகம் தொடர்ந்து அவர்களுக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். ஒரு கணவன் மனைவியின் நெஞ்சை உருக்கும் கதை அது… இந்த நாவலை முழுமையாக உள்வாங்க வேண்டுமெனில் மேலட்டையிலிருந்து பின்னட்டை வரை முழுமையாகப் படிப்பதன் மூலமே அது இயலும். இந்த நாவல் உங்களை உலுக்கியெடுக்கும். – “மாதொருபாகன்” வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புரையிலிருந்து
Out of stock
-
நெடுநேரம்
RM39.00பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும் அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது. விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது. வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
Only 2 left in stock
-
தீட்டுத்துணி
RM20.00இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஓட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உள்ளன.
Only 2 left in stock
-
கங்கணம்
RM43.00இன்றைய இளைஞர்கள் திருமணத்திற்குப் பெண் தேடி அலைதல் தமிழகம் எங்கும் எல்லாச் சாதிகளிலும் இயல்பாகிவிட்ட விஷயம். ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. 1980, 1990களில் நிகழ்ந்த பெண் சிசுக்கொலையின் விளைவு இது. முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பலர் தண்டுவன்களாகத் திரிகின்றனர். அவர்கள் நிலை பரிதாபமாக இருக்கிறது. காதல் உணர்வும் உடலை அறிதலும் உயிர்களுக்குப் பருவத்தில் வாய்க்க வேண்டியவை. அவை வாய்க்காமல் தடுக்கும் எதுவும் இயற்கைக்கு எதிரான சக்திதான். அவ்வகையில் இயற்கை சார்ந்த போராட்டம் ஒன்று இந்நாவலுக்குள் நிகழ்கிறது. அதை முன்னெடுத்துச் செல்ல நேரும் தடைகளும் அவற்றை எதிர்கொள்ளும்போதான மனநிலைகளும் இதனுள் விரிகின்றன.
Out of stock
-
ஆலவாயன்
RM24.00‘மாதொருபாகன்’ முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது. நிலம் சார்ந்த வாழ்வு உழைப்பினால் அர்த்தப்படுவதைச் செயல்களைப் பிடிக்கும் சொற்கள் வழியாகவும் எளிமையும் அடர்த்தியுமான தொடர்களைக் கொண்டும் இந்நாவல் கைவசப்படுத்தியிருக்கிறது. உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் காட்சிச் சித்திரமாக்கியுள்ளது. வட்டார மொழி வாழ்வோடு பிணைந்துள்ள பாங்கை வெளிப்படுத்தும்போது வாசிப்புத்தன்மை கூடும் என்பதற்கான சான்று இந்நாவல்.
Out of stock
-
ஏறுவெயில்
RM28.00ஏறுவெயில்
1991இல் வெளியான ‘ஏறுவெயில்’ நாவலின் செம்மைப்படுத்தப்பட்ட ஐந்தாம் பதிப்பு இது. நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஒன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் உறவு கையில் விழுந்த பனிக்கட்டிகளாய்க் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவியலாத மன நிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன். நேரான யதார்த்தக் கதை சொல்லலின் முக்கியத்துவத்தை இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ மீண்டும் நிரூபிக்கிறது.Only 2 left in stock
-
அர்த்தநாரி
RM24.00அர்த்தநாரி – பெருமாள்முருகன்
மாதொருபாகனின் தொடர்ச்சியே அர்த்தநாரி. கொஞ்சமும் தொடர்பறுபடாமல் கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தை சுற்றியே கதை. யதார்த்தங்களால் மனதில் இடம் பிடிக்கும் எழுத்து.
Out of stock
-
கொடை மடம்
RM75.00ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித்தாந்தத்தின் நிழலில், சிச்சிறு குழுக்களாய்ச் சிதறிப்போய் இயங்கிக்கொண்டிருந்த தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளும் நிலைப்பாடுகளும் விமர்சிக்கப்படுகின்றன இதில் அங்கதமும் கேலியுமாய். பின்புலத்தில், தன் அத்தனை விளக்குகள் வாசனைகளுடன் சந்தடி இரைச்சலுடன் உள்ளும் புறமுமாய் ஓடுவது மதுரை மாநகர். காலத்தின் புழுதி மிதக்கும் அதன் வீதிகளில் இருந்து பாத்திரங்களும் கதைகளும், ஜனரஞ்சகத்தின் பாடல்களும் சாம்ராஜின் துடிப்பும் துடுக்கும் கூடிய மொழிநடையில் கிளைத்துப் பெருகி நிறைகின்றன. துயரும் ஏமாற்றங்களும் கைத்த அபத்தங்களாகத் தோற்றங்கொள்ளும் இப்புனைவில், மையச்சரடாய் விரிகிறது சொல்லப்படாதவொரு விசித்திர காதல்கதை. கூடவே, மேன்மையான கற்பனைகளில் இருந்தும் ஒளிவீசும் நம்பிக்கைகளில் இருந்தும் நிர்த்தாட்சண்யமாய் தரையிறக்கப்பட்டு, ஊர் ஊராக இழுத்துச் செல்லப்படும், லட்சியங்களின் கெடுதேதிக் காலங்களில் ’வயதுக்கு வரும்’ ஓர் இளைஞனின் கதையும்… -கவிஞர் சபரிநாதன்
Only 2 left in stock
-
கரிப்புத் துளிகள்
RM30.00“தொரண்ணே இத பாருங்கண்ணே… இத பாருங்கண்ணே” என மூடிய வலதுகையை நீட்டிக்கொண்டு வந்தான் ஐயாவு. துரைசாமியின் முகத்துக்கு முன் தன் கையைத் திறந்து காட்டினான். ஐயாவின் உள்ளங்கையில் பளபளக்கும் கடல் மணலில் பளிங்குக் கள் போல கலலாமைக் குஞ்சுகள் படுத்திருந்தன. மிக அமைதியாக .. குழந்தை போன்று மென்மையாக அவை தன் நான்கு கால்களையும் அசைத்தபடி கூர்மையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. துரைசாமி முகத்தைத் திருப்பிக்கொண்டான். சுந்தர் அழுவதுபோல சத்தம் கேட்டது.
நாவலிலிருந்து.
In stock
-
தாரா
RM17.00தாரா எழுத்தாளர் ம.நவீனின் மூன்றாவது நாவல். மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்து மர ஆலையில் வேலை செய்ய வரும் நேபாளிகளுக்கும் அங்கு வசிக்கும் உள்ளூர் தமிழர்களுக்கும் இடையே நடக்கும் கலவரமும் அதனால் உண்டாகும் அமைதியற்ற நிலையும் நாவலின் அடிப்படை கதையோட்டம். அதன் ஆழத்தில் இரு சிறுமிகள் தங்கள் இனக்குழுவின் ஆன்ம தூய்மையை மீட்டெடுக்கும் வேறொரு கதையும் புதைந்துள்ளது.
RM34.00In stock
-
ஆழம்
RM26.00இந்நாவலின் வழி வாசகர்களுக்குள் மலையக காட்டு மக்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த பின்னர் அவர்களை அலைக்கழிக்கும் அதிகார ஜாதீய பின்னணியும் கடத்தப்படுகிறது.
Out of stock
-
ஸலாம் அலைக் (நாவல்)
RM45.00ஸலாம் அலைக் – ஷோபா சக்தி:
ஆசிரியர் குறிப்பு:இலங்கையில் வடபுலத்தில் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்தவர். பல வருடங்களாகப் பிரான்ஸில் வசிக்கிறார். கொரில்லா என்ற நாவலின் மூலம் தமிழ் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற ஷோபாசக்தி, தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். விவாதங்கள், விமர்சனங்களுக்கு அதிகம் ஆளானவர். இது இவருடைய சமீபத்திய நாவல்.
இரண்டு பகுதிகள் கொண்ட நாவல். இரண்டில் எந்த பாகத்தையும் முதலில் படிக்கலாம். நூலின் வடிவமும் அதற்கேற்றாற்போல் அமைந்துள்ளது.
சொந்த நிலத்தில், சொந்த மக்களிடையே முறைகேடு செய்யும் ராணுவம் வேறொரு நிலத்தைத் தங்குமிடமாகக் கொள்ளும் போது, அத்துமீறல்கள் சர்வசாதாரணமாக நடக்கும். அதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். உலகின் எந்த ராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய அமைதிப்படையின் Excesses நாவலின் பெரும்பகுதியில் வருகின்றன. விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளைத் தூக்கிச்சென்று பயிற்சி அளிக்கிறார்கள்…..Out of stock
-
வாழ்க்கை ஒரு விசாரணை
RM16.00பாவண்ணன் எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி. நல்ல சிறுகதைகள் பல எழுதியிருப்பவர். மனிதர்களை அவர்களது இயல்புகளை, பேச்சு வழக்குகளை- பொதுவாக வாழ்க்கையை- நன்கு கவனித்து மனித நேயத்துடன் எழுதுகிறவர். அவருடைய திறமைக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது இந்த நாவல். மக்களின் பேச்சிமுறைகள் இதில் ஆற்றலோடு கையாளப்பட்டிருக்கின்றன.
பாவண்ணனின் முதலாவது நாவல் இந்த ‘ வாழ்க்கை: ஒரு விசாரணை ’ வெற்றிகரமான இந்தப் படைப்பு ரசிகர்களின் வரவேற்ப்பையும் பாராட்டுதலையும் நிச்சயம் பெறும் என நம்பிகிறேன்.
– வல்லிக்கண்ணன்
Out of stock
-
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
RM60.00”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை. ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.” -ஆஷிஷ் நந்தி.
Out of stock
-




















