-
ஏழாம் உலகம்
RM37.00நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால்
புராணத்தில் மட்டும் தான் அப்படியா நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன. ‘ ஏழாம் உலகம்’ அந்த ஒருக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு, அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கி விடுவதில்லை. சிறந்த இயக்கிநருக்கான தேசிய விருது பெற்ற நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.Out of stock
-
புலப்படாத நகரங்கள்
RM15.00மார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படும் கதை இது. இது போன்று கேள்விப்படும் விஷயங்களையும் நேரிடையான அனுபவங்களையும் வைத்து மார்கோபோலோ எழுதியது “The Travels”.
Out of stock
-
மணற்குன்று பெண்
RM22.00women in the dunes | kobo abe உலகில் இதுவரை 20 மொழிகளில் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஹிரோஷி தேஸிகாஹரா என்பவரால் திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ்பெற்ற ‘கேன்ஸ் திரைப்பட விழாவில்’ சிறந்த திரைப்படத்துக்கான விருது பெற்றது. கோபோ ஏப், கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கபட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதன் தாக்கத்தில் பலவிதமான தத்துவ சித்தாந்தங்களை நம் முன்வைக்கிறார். நாவலின் கதாநாயகனின் பார்வையின் வாயிலாக, அவர் நம் முன்வைக்கும் உள, சமூக மற்றும் இருத்தலியல் குறித்த விவாதங்கள் கவனிக்கபட வேண்டியவை.
Out of stock
-
பதினோரு நிமிடங்கள்
RM30.00உலகிலேயே மிக அதிகமாக வாசிக்கப்படும், நேசிக்கப்படும் எழுத்தாளர். 72 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் 140 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ள நூல்.
Out of stock
-
பட்ட விரட்டி
RM40.00‘பட்ட விரட்டி’ என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்ட இந்நூல் ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசனியால் எழுதப்பட்ட முதல் புதினம்.
Out of stock
-
நள்ளிரவின் குழந்தைகள்
RM55.001947 ஆகஸ்டு 15 அன்று சரியாக நள்ளிரவில் – இந்தியாவின் சுதந்திரமடைந்த துல்லியமான கணத்தில் – பிறந்த குழந்தையான சலீம் சினாய் பத்திரிகைகளால் கொண்டாடப்படுகிறான், பிரதமர் நேருவினால் வரவேற்கப்படுகிறான். ஆனால் பிறப்பினால் விளைந்த இந்த ஒருங்கிணைவு, சலீம் ஏற்கத் தயாராயில்லாத பல விளைவுகளைக் கொண்டிருக்கிறது: அவனுடைய தொலைவிலுணரும் சக்தி ஆயிரம் ‘நள்ளிரவின் குழந்தைகளோடு’ தொடர்புறுத்துகிறது. அவர்கள் எல்லோருமே இந்தியா சுதந்திரமடைந்த முதல் மணியில் பிறந்தவர்கள். மற்றவர்களால் உணரஇயலாத அபாயங்களை மோப்பத்தினால் உணரும் விசித்திரமான முகர்திறனையும் அளிக்கிறது. தன் தேசத்தோடு பிரிக்கவியலாத தொடர்பினைக் கொண்ட சலீமின் தன்வரலாறு, நவீன இந்தியா தனது மிகச் சாத்தியமற்ற, மிகப் புகழ்வாளிணிந்த பாதையில் எதிர்கொண்ட பேரிடர்களையும் வெற்றிகளையும் உள்ளடக்கும் சுழற்காற்று.
Out of stock
-
தீம்புனல்
RM38.00இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்களைத் துல்லியமாகச் சொல்லும் முதல்நாவல் இது. குடும்ப உறவுகளிலும் சமூக உறவுகளிலும் நிகழ்ந்த மாற்றங்களுக்கும் நில உறவுகளில், உற்பத்தி உறவுகளில நிகழ்ந்த மாற்றங்களுக்குமான தொடர்புகளை மிக நேர்த்தியாக இந்த நாவல் அடையாளம் காண்கிறது. கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப் படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக் கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது. – மனுஷ்ய புத்திரன்
Out of stock
-
சோளகர் தொட்டி
RM35.00ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர். வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பினணப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
Only 1 left in stock
-
ஆடு ஜீவிதம்
RM25.00நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான திட்டத்தைத் தீட்டுகிறார். மலையாளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற ஆடு ஜீவிதம் சிறந்த விற்பனைப் பட்டியலில் இடம்பெற்ற நாவல். மலையாள இலக்கியத்தின் அற்புதமான புதிய எழுத்தாளர்களில் ஒருவரான பென்யாமின், நஜீபின் விசித்திரமானதும் அவலச்சுவை கொண்டதுமான பாலைவன வாழ்க்கையை நையாண்டியாகாவும் மென்மையாகவும் கூறி, தனிமை மற்றும் புறக்கணிப்பின் உலகளாவிய கதையாக இதை உருமாற்றுகிறார். 2009 இன் கேரள சாகித்திய அகாதெமி விருதினை வென்ற நாவல்
Out of stock
-
சிதைவுகள்
RM15.00ஆப்பிரிக்காவில் ஓர் பழங்குடி சமுதாயத்தில் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வருகையால் நிகழும் மாற்றங்களை பற்றிய நாவல் இது. நாவல் ஒக்கொங்வோ என்ற ஈபோ இன மனிதனை பற்றியது. இவன் மூலமாக இவனது இனத்தையும் நாகரீகத்தையும் நமக்கு காட்டுகிறார் சினுவா. அவனுடையது பழங்குடி சமுதாயம். அதற்கே உரிய மூடப்பழக்கங்களையும் நெறிமுறைகளையும் சமுதாய அமைப்பையும் சிறு தெய்வங்களையும் நிலத்துடன் இயைந்த வாழ்வையும் கொண்டது.
Out of stock
-
சிலுவையில் தொங்கும் சாத்தான்
RM36.00பேராசிரியர் கூகி வா தியாங்கோ ஓராண்டுக் காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்தபோது மலம்துடைக்கும் தாளில் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’ நாவலை எழுதினார். சிறைக் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு,பின்னர் எதிர்பாராத விதமாக அவரிடம் திருப்பித் தரப்பட்டது இந்தக் கைப்பிரதி.1980 ஆம் ஆண்டில் கிக்கூயூ மொழியில் மூன்று பதிப்புகளைக் (15,000 பிரதிகள்) கண்ட இந்த நூலை 1982 ஆம் ஆண்டு கூகி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கனவுகளுக்கும் கசப்பான உண்மைகளுக்கும் நடுவே, மாயத்தோற்றங்களுக்கும் மறுக்கவியலா எதார்த்தத்திற்கும் நடுவே நாவல் கட்டவிழ்கிறது. கென்யாவின் அரசியல் – பொருளாதார – பண்பாட்டு விடுதலையைக் கோரும் உணர்ச்சிமயமான குரலை மரபுவழி கதைசொல்லும் பாணியும் பிரெக்ட், புன்யான், ஸ்விப்ட், பெக்கெட் போன்றோரின் புதிய பாணியும் இரண்டறக் கலந்த மொழியில் கூகி இந்நாவலைப் படைத்துள்ளார்.
Out of stock
-
உருமாற்றம்
RM30.00ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு வழிகள் இருக்கின்றன என்பதைக் காட்டியது,” என்று குறிப்பிடுகிறார்.
காஃப்கா நவீனக் கலைமரபில் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிக்காசோ, மல்லார்மே ஆகியோருடன் வைத்து எண்ணத்தக்கவர் என்று திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய கலை “புதிர் நிறைந்த தெளிவு. இலக்கியம் இது வரையில் சந்தித்திராத நம்மை உலுக்கிப் பிழியும் பூடகமான படைப்பு,” என்றார் ஒரு விமர்சகர். கவிஞர் டபிள்யு. எச். ஆடன் காஃப்காவை இருபதாம் நூற்றாண்டின் தாந்தே என்று புகழ்ந்தார்.Out of stock
-
காஃப்கா – கடற்கரையில்
RM90.00தனது பதினைந்தாவது பிறந்தநாளன்று காஃப்கா டமூரா வீட்டை விட்டு ஓடிப் போகிறான். அவன் அப்பாவின் சாபம் ஓரு நிழலைப் போல அவன் மீது படிந்திருக்கிறது.
முதியவர் நகாடா, தொலைந்த பூனைகளைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர், சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த விபத்தின் விளைவுகளில் இருந்து அவரால் மீள முடிவதில்லை. எதிர்பாராத ஒரு தருணத்தில் அவருடைய எளிய வாழ்க்கை தடம்புரண்டு தலைகீழாக மாறுகிறது.இவர்களிருவரின் உலகங்களும் இரு இணைகோடுகளைப் போல பயணிக்க, பூனைகள் மனிதர்களோடு உரையாடுகின்றன, வானிலிருந்து மீன்கள் மழையாகப் பொழிகின்றன, ஒரு விலைமாது ஹேகலைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கிறாள், இரண்டாம் உலகப் போரின் காலத்தில் தொலைந்து போன இரு வீரர்கள் வயதே கூடாதவர்களாக காட்டுக்குள் மறைந்து வாழ்கிறார்கள். குரூரமான முறையில் ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலை செய்தவரோ கொலையுண்டவரோ யாருடைய அடையாளங்களும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை. இவையாவும் சேர்ந்து ஒரு மாயப் புனைவுவெளியை உருவாக்குகின்றன.
Out of stock
-
கசார்களின் அகராதி
RM50.001984-இல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்நாவல் ‘இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனினும் பாவிச் இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. இரு பத்தாண்டுகளாக தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி மற்றும் படைப்பாளர் பாவிச். பாவிச் பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர் போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு நூறு முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவொரு அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச்சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்களென (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரசியமாக அமைக்கப்பட்ட இந்நாவலை எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கி, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளலாம். மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் என சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டு விடக்கூடாது என்ற அளவில் மிகக்கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால் மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடையனவற்றுக்கும் ஒரேமாதிரியான முடிவு சாத்தியமில்லை என்றார். இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு
வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக் கொண்ட இனக்குழுவொன்று, அதற்குப் பலநூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிடவேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய – செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார். நாவலைப் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றை சுவாரசியமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின்வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப்புள்ளியில் துவங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார்.
In stock
-
ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்
RM38.00நாவலின் தொடக்கத்தில், ஆர்தேமியோ க்ரூஸ் – ஓர் எல்லாம்வல்ல செய்தித்தாள் நிறுவனர் மற்றும் நிலப்பிரபு, மோசமாக நோயுற்ற நிலையில் படுக்கையில் கிடக்கிறார். கனவு போன்ற தெறிப்புகளில் அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டங்களை நினைவுகூர்கிறார். கார்லோஸ் புயந்தஸ் இந்தக் கலைடாஸ்கோப்பின் தொடர்காட்சிகளை திகைப்பூட்டும் விதத்தில் புதுமையான வகையில் கையாள்கிறார். ஒரு நினைவின்மீது மற்றொரு நினைவை அடுக்குகிறார், தொடக்ககாலத்தில் மெக்சிகோ புரட்சியின்போது க்ரூஸ்சின் நாயகத்தன்மை வாய்ந்த ராணுவ நடவடிக்கைகள், போருக்குப்பின் இரக்கமற்ற, நேர்மையற்ற முறையில் ஏழ்மையிலிருந்து செல்வத்தின் உச்சியில் பண்ணைவீட்டின் முதலாளியாக உயர்வது, தற்போது உடல்நலமில்லாத முதியவராக தனது நீண்ட, பல்வேறு வன்முறைகள் நிறைந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பது என. உண்மையில் இது கார்லோஸ் புயந்தஸ்சின் ஆகச்சிறந்த படைப்பு, ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ இன்றைய மெக்சிகோவுக்குள் நிகழும் ஓர் உயிரோட்டமுள்ள பயணம்.
“மிகுந்த கற்பனையாற்றலும் மிகுந்த திறனும் கொண்ட நாவல். ஒரு மனிதனின் வாழ்க்கை மூலமாக நவீன மெக்சிகோவின் வரலாற்றைக் கூறிச்செல்கிறது… இந்தப் புத்தகத்தின் அமைப்புநயம், கட்டமைவு, மனோவியல் மற்றும் விவரிப்பின் வளமையைக் கண்டு திகைப்படைந்தேன்.”
– ஸ்டீபன் ஹ்யூ-ஜோன்ஸ். (நியூ ஸ்டேட்ஸ்மென்).
Only 1 left in stock
-
பேய்ச்சி
RM20.00வரலாற்றை ஒரு கையாலும் தனிமனித உளப்பரிணாமங்களை இன்னொரு கையாலும் முடைபவனே மிகச்சிறந்த நாவலாசிரியன்.செயற்கையான உத்திகள் ஏதுமில்லாமல், இயல்பாக உருவாகிப் பெருகிச்செல்லும் மொழியால் அந்த பெருஞ்சித்திரத்தை நவீன் உருவாக்குகிறார். இன்னமும்கூட இந்நாவல் தமிழகத்தில் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அதற்கான வாசகர்களைக் கண்டடையும்போது தமிழில் ஒரு சாதனை என்றே கொள்ளப்படும். – ஜெயமோகன்
(மலேசிய அரசாங்கத்தால் தடை செய்ப்பட்ட நாவல் எனவே இந்நூல் விற்பனைக்கு இல்லை)
Out of stock
-
மிச்சமிருப்பவர்கள்
RM10.00பல தசாப்தாங்களாக அடக்குமுறைகள், உரிமை இழப்புகள், பாரபட்சங்கள், மத/கலாசார அழிப்பு ஆகிய கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் மலேசியத் தமிழ் இந்துக்கள் கோலாலம்பூரில் காந்தியின் சித்திரங்களையே பதாகைகளாக ஏந்தி அந்த நாளில் ஒன்று திரண்டு வந்தனர். அதனை மலேசிய அரசு கையாண்ட விதத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த எழுச்சியின் பின்னணியின் பதைபதைப்பு குறையாமல் அமைந்தது இந்நாவல் – ஜடாயு
Only 2 left in stock
-
ரிங்கிட்
RM10.00ரிங்கிட் நாவலின் அடிநாதமே இனங்களுக்கிடையே இருக்கின்றே பதற்ற நிலையைப் பற்றி பேசுவதுதான். குறிப்பாக மலாய் மற்றும் சீன சமூகங்களுக்கிடையே நிலவுகின்ற பதற்றநிலை நாவலில் எல்லா நிலைகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. – க.கங்காதுரை
In stock
-
எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
RM12.50‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.
Out of stock
-
வானம் வசப்படும்
RM50.00ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவரஸ்யமாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்களின் மொழி எனக்கு கை வந்திருக்கிறது ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகிறது. -பிரபஞ்சன்
Out of stock




















