-
ரப்பர்
RM19.00ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அலைமோதுகிறான். அவனில்தான் ஒரு நூற்றாண்டு திசைமாறும் தருணத்தின் தத்தளிப்பு முழுக்க உள்ளது. அவன் அடையும் ஒரு தரிசனமே உண்மையில் இந்நாவல். ஆற்றின் குறுக்காக காரைக் கொண்டுசெல்லும்போது கூச்சலிடும் குழந்தைகளின் குதூகலம் கண்டு அவன் மலரும் கணம். இந்நாவலுக்கு உந்துதலாக இருந்ததே நான் என் இளமையில் மாறப்பாடி ஆற்றின் குறுக்காகச் சென்ற சாலையில் கண்ட ஒரு காட்சிதான். கார் மறுபக்கம் சென்றபின் சன்னல் வழியாக குழந்தைகளுக்குக் கையாட்டிச் சிரித்த அந்த இளைஞன், அவன் ஒரு நாவலாக மாறியிருப்பதை அறிந்திருக்கமாட்டான்
-ஜெயமோகன்
Out of stock
-
கம்பா நதி
RM15.00‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ஓடியதோ ஓடவில்லையோ, இப்போது அதற்கான குட்டி மைய மண்டபம் மட்டும் இருக்கிறது. மண்டபத்தின் கீழே ‘கசங் கணக்காகத் தண்ணீர்’ கிடக்கிறது. இதுதான் நாவலின் பரிமாணமாக விரிகிறது. இந்நாவலுக்குள் ஏராளமான மனுஷர்களும் மனுஷிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். நதியின் அலைவீச்சு தன்னுள் மிதக்கும் பலவற்றையும் கரையோரத்தில் ஒதுக்குவதைப்போல இவர்களும் ஒதுக்கப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நதியில் மிதந்து வந்ததற்கான பலாபலன்களை நம் மனத்துக்குள் நுழைத்துவிடுவதில் இந்த எழுத்து புரியும் மாயம் அற்புதமானது. சாதாரண மனிதர்களின் இருப்பையும் அவர்களின் தேடலையும் ஆசை அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் தோல்விகளையும் வரலாற்றில் நிறுத்திவிட முடியுமென இந்த நாவல் நம்முன்னே கல்லெழுத்தாகப் பதிய வைக்கிறது. நம் சமூகத்தின் பெண்ணினம் இந்த நவீன யுகத்திலும் எதிர்கொள்கிற காவியச் சோகம் நாவலினூடே வெளிப்பட்டு நம்மை உலுக்குகிறது.
Out of stock
-
கடல்புரத்தில்
RM14.00கடல்புரத்தில் நாவலில் வருகிற மணப்பாட்டு ஊர்க்காரர்களை நினைத்தால் வெகு வியப்பாக இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப்படுகிறது. கொலைசெய்தார்கள்; ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள்; சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.
Out of stock
-
நீலகண்டம்
RM27.00நவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.
Out of stock
-
செல்லாத பணம்
RM29.00“நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
மனித அனுபவத்தின் முழுமை…
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
‘செல்லாத பணத்’தின் சிறப்பு.Only 1 left in stock
-
எங் கதெ
RM13.50இமையத்தின் இந்த நெடுங்கதையில்
ஆண்-பெண் உறவின் ஒரு
பரிமாணம் முழு ஆவேசத்துடன்
பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது.இமையத்தின் படைப்புகள்
அனைத்திலிருந்தும் வேறுபட்ட
களம்; வேறுபட்ட நடை.Out of stock
-
செடல்
RM24.30மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதீகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய-தமிழ்ச் சமூக, பண்பாட்டுக் கூறுகள் பாரம்பரியச் செல்வமா, சாபமா? இந்திய -தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலிகேட்கின்றன? ஒரு ஐதீகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர்ஊராக, கோவில்கோவிலாகச் சென்று ஆடுகிற—அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற—ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்.
Out of stock
-
அந்நியன்
RM21.00இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.
‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
Out of stock
-
அஞ்ஞாடி
RM120.00சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…
Out of stock
-
கோவேறு கழுதைகள்
RM18.90இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.
சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.
Out of stock
-
-
வீடியோ மாரியம்மன்
RM18.00ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
கூத்து வைக்காம வுட்டுப்புடாத.– நாவலிலிருந்து
Only 1 left in stock
-
பெத்தவன்
RM6.00மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
எடுத்துச்சொல்லும் நெடுங்கதை.Only 1 left in stock
-
துயில்
RM47.70தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.
Out of stock
-
நெடுங்குருதி
RM45.00குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
Out of stock
-
யாமம்
RM36.00சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.
எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.
Out of stock
-
சஞ்சாரம்
RM30.60தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.
Out of stock
-
உறுபசி
RM18.00நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.
Out of stock
-
உப பாண்டவம்
RM34.20இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.
Out of stock
-
பிறகு
RM27.50பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.
Out of stock




















